தண்ணீர் தண்ணீர்.....
இதை நான் எழுத காரணம்.., நீரின்றி அமையாது உலகு!!! என்று வள்ளுவன் சொன்னது. சற்று நேரத்துக்கு முன் தொலைக்காட்சியில் கண்ட காட்சி, அதை நிஜம் என்று புரியவைத்ததால்தான். சில நாட்களுக்கு முன் என் நண்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். அதிலும் இன்று நான் தொலைக்காட்சியில் பார்த்த காட்சியிலும் அதிக வித்யாசம் இல்லை.
தண்ணீர்!!! ஆம் தொல்லைக்காட்சியில் நான் பார்த்தது... கென்யா (KENYA) வில் தண்ணீர் இன்றி இறந்துபோகும் பிஞ்சு குழந்தைகளை. பூமியின் தண்ணீர் வற்றிப்போய் பாலைவனம் போல் காணப்படுகிறது மக்கள் வாழும் பகுதி. உணவும் தண்ணீரும் இல்லாத நிலையில் மாடுகளும், பாலைவனக் கப்பல் என்று சொல்லப்படும் ஒட்டகங்களும் மடிந்து போய் கிடக்கின்றன. கொடுமையான காட்சி.
தொண்டு நிறுவனமான யூ.என் உணவு நிறுவனம் தற்போது அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி வருகிறது. அதுவும் வரும் புதன் கிழமை வரைதான் வரும் என்று தகவல்.
இவ்வளவு விளைவுகளும் தண்ணீரால். வள்ளுவன் வாக்கு நிஜம். தயவு செய்து தண்ணீரை முடிந்த மட்டும் வீணாக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை சொல்லுங்கள். ஏனென்றால், கென்யாவின் நிலை மற்ற இடங்களுக்கு வருவதற்கு வெகு நாட்கள் ஆகாது... !!!
அன்புடன்,
மனசு...
1 Comments:
முடியாது..
முடிந்தவரை தண்ணீரை வீணடிக்கிறோம். ஏற்கனவே சென்னை பாலைவனமாகிவிடுவதற்கு தயாராகிவிட்டது. சென்னைக்கு தண்ணீர் தர தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிட அரசாங்கம் தயாராக இருக்கிறது. நிலத்தடி நீரை அதிகரிக்க குளத்தைத் தூர்வாரச்சொன்னால் குளத்தில் பட்டா போட்டுவிட்டு கடல் நீரை குடிநீராக்குகிறது.
பணம்தான் முதலில். பிறகுதான் எல்லாம். பணத்திற்காக பிணம் தின்போமா என்றால், அதில் தவறில்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.
Post a Comment
<< Home