அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Saturday, March 11, 2006

நினைவலைகள்...
















சில நேரங்களில், மனசு எதுவுமே காரணங்கள் இல்லாமல் அடம்பிடிக்கும். ஏதேதோ சொன்னாலும் சமாதானமாகாமல் நம்முடம் சண்டை போடும். ஒரு சில நாட்களுக்கு முன்னால் என் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவன் சொன்னது இதுதான்,"டேய் என்னவோ தெரியலடா மனசு ரெம்ப பாரமா இருக்குடா... என்னவோ தெரியல..."

சில நேரங்களில் நமக்கே நாம் உதவி செய்யமுடியாத நிலையில், மனம் தன்னந்தனியாக உணரும்...

சில நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் அது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஞாபகம் வரும்...

இன்றைக்கு நான் காலையில் பிரட் பஜ்ஜி சாப்பிடும் போது நான் என் நண்பர்களுடன் விடுதியில் நாங்கள் சாப்பிட்டது ஞாபகம் வந்தது. நான்கு வருடங்களுக்கு முன்... ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கள் விடுதியில் பிரட் பஜ்ஜிதான் போடுவார்கள். தக்காளி சாசும் சட்னியுமாக ஒரு பிடி பிடிப்போம். நானும் என் நண்பன் குப்புவும்(செல்லமாக நான் அப்படி கூப்பிடுவேன், முழுப் பெயர் குப்புசாமி) குளித்துவிட்டுதான் சாப்பிடுவோம். ஆனால் ஒருசிலருக்கு குளிக்காமல் சாப்பிட்டால்தான் ருசிக்குமோ என்னவோ, சனி ஞாயிரு விடுமுறை விட்டுவிடுவார்கள்... ஆனால் இரவுக்குளியல் நடக்கும். சாப்பிட்டுவிட்டு காபி டம்ளருடன் B மெஸ் முன்னால் ஒரு அரை மணி நேரம் "பொங்கல்" (அரட்டைக்கு நாங்கள் வைத்த பெயர்) வைக்கவில்லை என்றால் அன்றைக்கு பொழுதே போகாது. சாப்பிட்டுவிட்டு ஆக்டகன்(Octagen) போறேன் பேர்வழி என்று போய் உட்கார்ந்தால் மணி 12 அடிக்கும் முன்பே மெஸ்ஸில் ஆஜர் ஆகிவிடுவோம். மதியம் சப்பாத்தியும் சென்னா மசாலா சாதம் ரசம் என்று தூள் பறக்கும். வயிரு முட்ட சாப்பிட்டு அப்படியே அறைக்கு போய் ஜன்னல் கதவு எல்லாம் அடைத்துவிட்டு கொஞ்சம் கூட வெளிச்சம் வராமல் அடைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தோம் என்றால் சாயங்காலம் வரை சக்கை தூக்கம் போடுவோம்... சாயங்காலம் வடை காபி அப்படியே அரட்டை... கல்லூரியை சுற்றி வந்தால் மருபடியும் 7.30 க்கு சாப்பாடு... அட அட என்ன வாழ்க்கைடா அது... கல்லூரி வாழ்க்கை என்பது திரும்பக் கிடைக்காத சொர்க்கம்... யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் சுக துக்கங்களில் தோள் கொடுத்து அரட்டை அடித்து... தூங்காமல் விடிய விடிய விஜயிலும், ஜெயாவிலும் "மெலடி மெட்டுக்கள்" பார்க்கவில்லை என்றால் அன்றைக்கு தூக்கமே வராது...

இப்போது என்னப்பா எப்படியிருக்க என்பதோடும் குசல விசாரிப்புகளோடும் ஓடுகிறது வாழ்க்கை ஓட்டம்... எங்கே போய் நிற்குமோ...?

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நிகழ்வுகள் இருக்கும்...

நினைத்துப்பாக்கும் போது சுகத்தோடு கொஞ்சம் சோகமும் வந்து மனசுக்குள் அப்பிப் கொள்ளும்... பட பட என்று அடித்துக்கொள்ளும்... ஆனால் அந்த சுகத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள அதே நண்பர்கள் பக்கத்தில் இருந்தால்...

சேரன் படத்தில் சொன்ன மாதிரி....

ஒருமுறைதான் ஒருமுறைதான்....
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒருமுறைதான்...

அன்புடன்,
மனசு...

1 Comments:

Blogger Pandian R said...

படம் நல்லாத்தான் இருக்கு. அதில உள்ளதுமாதிரி பழசைத் திருப்பிப்பார்க்கிறதுல உள்ள சுகம் தனிதான். அதற்காக ஏங்க ஆரம்பிச்சா தலைவலிதான். ஏழாம் கிளாஸ் ஆங்கிலப்பாடம் "will those days come back?" நியாபகம் இருக்கா? கடைசில "no" அப்படின்னு முடிஞ்சிருக்கும்.

ஒவ்வொருத்தர் வாழ்விலும் அவர்தம் கல்லூரி விடுதி வாழ்க்கை என்பது ஒரு பாடம். சிலருக்கு அது வேப்பங்காயாக முடியும். சிலருக்கு அது நெல்லிக்காய் மாதிரி.. அடித்தொண்டையில இருந்துட்டு இனிச்சிட்டே இருக்கும். அத அனுபவிச்சிட்டே அடுத்தவேலையைப் பார்க்க வேண்டியதுதான். அதில ஆச்சரியம் என்ன தெரியுமா? இப்பப் பார்க்கக்கூடிய வேலையும் இரண்டு வருசம் கழிச்சு நினைச்சுப் பார்த்தா அதுக்குள்ள எஃபக்ட் இருக்கத்தான் செய்யும்..

இதத்தான் சுப்புனி சித்தர் சொல்லியிருக்கார் :)

11:30 PM  

Post a Comment

<< Home