தங்கமே தங்கம்....
இன்றைய சூழ்நிலையில் யார் அதிகமாக மக்களுக்கு நன்மையை செய்யப் போகிறோம் என்ற நினைப்பு இருக்கிறதோ இல்லையோ.., எப்படி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிப்போம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் நிறையவே இருக்கிறது... அரையனாவிலிருந்து ஆயிரக்கணக்கில் தேர்தல் நேரத்தில் மட்டும் செலவழிக்கிறார்கள் அரசியல்வாதிகள்(ஏனோ தேர்தலுக்கு முன் இந்த எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வருவதில்லை)... இந்தத் தேர்தலில் இன்னும் ஒரு சிறப்பு முதலமைச்சரே மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரைபவுன் தங்கம்(!) தருவதாக அறிவித்ததே. அதைப்பற்றிய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சர சர வென்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு வானத்தில் ஏறி சூரியனைத் தொட்டதே இப்போதய ஹாட் டாக்...
இந்த நிலையில் சாதாரண மக்கள் தங்கள் பெண்களுக்கு இனி எத்தனை பவுண் தங்கம் போட்டு கல்யாணம் செய்து வைக்க போகிறார்கள்? இன்றைய செய்தி நிலவரப்படி ஒரு பவுன்(8 கிராம்) தங்கத்தின் விலை 8000 யிரத்தைத் தொட்டுவிட்டது.
தங்கத்தின் விலை குறைந்தாலும் அதை விடமாட்டேன் என்றே நாம் அதன் பின்னே ஓடித்திரிந்து கொண்டிருக்கிறோம்... இது நிஜமான அறிவீனம். அதற்குப்பதில் தங்கம் வாங்கும் பணத்தை நல்ல லாபம் தரும் தொழிலில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். தங்கமே லாபம் தரும் தொழில் என்பது இன்னொரு புறம் இருக்க, சாதாரண நடுத்தட்டு மக்கள் படும் பாடுதான் ரெம்பவும் உறுத்தலாய் இருக்கிறது...
இந்தக்காலத்து இளைஞர்களும் இன்னும் திருந்தியவாறு தெரியவில்லை. இன்னும் பெண்வீட்டார் போட்டனுப்பும் தங்கத்திலும், கொடுத்துவிடும் பணத்திலும் தான் தன் பெண்டாட்டியை காப்பாற்ற நினைக்கிறார்கள்... இந்த நிலை மாறினால், அல்லது வரதட்சணை கொடுப்பவர்க்கும் வாங்குபவர்க்கும் தண்டனை என்பது சட்டமாக்கப்பட்டால் ஓரளவு நாடு முன்னேரும்.
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை கூட்டப்பட்டதினாலேயே இங்கும் தங்கம் விலை அதிகமாக்கப்பட்டது என்பது வியாபாரிகளின் கூற்று. இந்த நிலை மாற மக்கள் ஒரு முடிவு எடுக்கலாம்.
எனக்கு தெரிந்தவரை இந்தியாவிலேயே, அதிகமாக தங்கம் புளங்கும் இடம் தென் இந்தியாதான் (உலகத்திலேயே என்று கூட சொல்லலாம். புள்ளிவிபரப்படி உலகில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதும் ஆபரங்களுக்காக அதிக அளவில் உபயோகிப்பதும் இந்தியர்களே (815 metric tons in 1998)!!!. பார்க்க http://www.gold.org/value/news/article/2650/)
தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில்தான் மக்கள் தங்கம் தங்கம் என்று அலைவதை அதிகமாக காணமுடிகிறது. பார்பதற்கு அழகாக இருக்கிறது என்பதுதான் தங்கநகை அணிவதற்கான காரணம் ஒருபக்கம் இருக்க, யார் அதிக நகை வைத்திருக்கிறார்களோ அவர்களே மனிதர்கள்(!) என்ற தரக்குறைவான எண்ணம் நம் மக்களிடையே இல்லை என்பதை யாரும் இல்லை என்று கூற முடியாது.
இந்த நிலை நீடித்தால் தங்கமும் வைரத்தைப் போல எளியவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். இனி மக்கள் தங்கம் வாங்கப்போவதில்லை என்ற முடிவெடுதால் கண்டிப்பாக இந்த நிலை மாறும். என்ன விலை சொன்னாலும் வாங்குவேன் அழகே என்ற மனிதர்கள் இருக்கும் வரை தங்கவிலை வானத்தில் ஏறி நிலாவுக்கே போய்விடும்!!!
மக்கள் சிந்திப்பார்களா???(!!!)
இல்லை நகைக்கடை வாசலில் சிரிக்கும் பொம்மையைப் பார்த்து அங்கேயே தவம் கிடப்பார்களா...?
பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!!!
அன்புடன்,
மனசு...
5 Comments:
தங்கத்தை பற்றி தங்களின் கருத்து மிக சரி. முதலீடு என்பது தங்கம் மட்டும்தான் என்ற எண்ணம் மாற வேண்டும் அப்போதுதான் தங்கத்தின் விலை சற்றேனும் குறையும்.
வரதட்சணையை சட்டம் போட்டு தடுக்க முடியாது. ஆண்கள் மறுத்தால் மட்டும்தான் தடுக்க முடியும்.
நண்பர் பாரதிக்கும், தோழி அனுசுயா அவர்களின் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
தாங்கள் சொல்வது சரியே... தங்கம் என்பது அவசர காலங்களின் உதவும் என்பது சரியே. அதற்காக தங்கம் மட்டுமே வாங்கி வைத்துக் கொள்வேன் என்ற எண்ணம் தவறு. அதற்குப்பதிலாக ஆரோக்கியமான் விசயங்களில் பணத்தை முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.
அதேபோல் சட்டங்களால் மக்களை என்றும் திருத்த முடியாது என்பது நிஜமே..
பார்க்கலாம்... காலம் மாறும்... மக்கள் மாறுவார்களா.....
This comment has been removed by a blog administrator.
I thought there were already laws on dowry...?
நீங்கள் சொல்வது போல் வரதட்சணை தடுப்பு சட்டம் இருப்பது நிஜம்தான் சன்சைன். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்வீட்டாரோ அல்லது பெண்ணோ புகார் கொடுக்கவேண்டும். அதற்கு எத்துணை பேர் தயாராக இருக்கிறார்கள்_.
போகும் இடத்தில் தன் பெண் நன்றாக இருக்கவேண்டும் என்று பெண்ணின் பெற்றோரே விரும்பி தன் பெண்ணுக்கு செய்வது வரவேற்கப்பட வேண்டியதே. அதற்காக கிலோ கணக்கில் தங்கமும் லட்சக்கணக்கில் பணமும் கேட்கும் ஆண்வீட்டாரை என்ன சொல்வது.
வரதட்சனை கொடுப்பதும் குற்றம் என்பது சட்டமாக்கப்படும் வரை இந்தத் தொல்லைகள் ஓயாது...
அன்புடன்,
மனசு...
Post a Comment
<< Home