கோல்பா... கோலிக்குண்டா...
ஓரிரு நாட்களுக்கு முன்னால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் சுவாரசியம் குறைஞ்சதால வேற எதாவது பார்க்கலாமேனு வேற அலைவரிசைக்கு ஒன்றொன்றாக தாவிக்கொண்டிருந்தேன். ஒரு ஜெர்மன் அலைவரிசையில் கோல்ப்(Golf) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விளையாட்டின் விதிமுறைகள் கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் சரி என்னதான் பண்றாங்கனு பாக்கலாமேனு பார்க்க ஆரம்பிச்சேன்.
விளையாட்டு என்னவோ விலை உயர்ந்த விளையாட்டுதான் ஆனா அதன் ஆதி என்னவோ நம்ம ஊருல பசங்க விளயாடுற கோலிக்குண்டுதான் அடிப்படைனு தோனுது... வித்யாசம் என்னனா... பசங்க கோலிக்குண்ட அடிக்கிறது கைவிரலால்... ஆனா கோல்ப்ல பந்த அடிக்கிறது இரும்பு குச்சியால... என்ன கோல்ப் பந்து கோலிக்குண்டை விட கொஞ்சம் அளவு பெரிசா இருக்கு அவ்வளவுதான்... ஆனா கோலிக்குண்டுல மட்டா-னு பெரிய குண்டும் இருக்கு...
கோல்ப்ல பக்கத்தில் இருக்குற குழிக்குள்ல அந்த பந்த அடிக்கிறது, கிட்டத்தட்ட நாம "சிட்டு முட்டு" விளையாடுற மாதிரியே இருக்கு... தூரத்துல இருக்குற குழிக்குள்ல பந்த அடிக்கிறது நம்ம "கட்டு குண்டு" மாதிரி இருக்குங்க அவ்வளவுதான்... பெரிய வித்யாசம் என்னன்னா... பணக்கார பசங்க விளையாடுற விளையாட்டு கோல்ப்... ஏழப்பசங்க விளையாடுற விளையாட்டு குண்டு... என்ன பணக்கார பசங்க எதயுமே கையால தொடமாட்டங்க (சாப்பாட கூடத்தான்)... அதான் கோல்ப் பந்தகூட குச்சிய வச்சு அடிக்கிறாங்க... அவ்வளவுதான்!!!
கிட்டதட்ட 15 வருசம் முன்னாடி விளையாடின ஞாபகம்... இப்ப ஊரு பக்கம் வந்தாலும் ஆசையாத்தான் இருக்கு... ஆனா என்னடா சின்னப்பய மாதிரி குண்டு விளையடுறனு கேலி பண்றதால விளையாடுறதில்ல...
ஆனா நாங்க விளையாண்ட காலம் இன்னும் நினைவில பசுமயா இருக்குங்க... ஏதேதோ விளையாடுவோம்... கட்டுகுண்டு, பூந்தான், இன்னும் சிலது மறந்து போச்சுங்க... காலம் ஓடுது... என்ன நம்ம ஊருல இருக்க விசயங்கள கொஞ்சம் மாத்தி ஏதாவது புது பேரு குடுத்துடறாங்க... நம்ம விளையாட்டுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது சந்தோசமா இருக்கு...
என்ன குண்டு விளையாட ஆசையா இருக்கா....???
அன்புடன்,
மனசு...
4 Comments:
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரதி. நீங்க சொல்ற மாதிரி சின்ன வயசுல நடந்த விசயங்கள நினச்சு பார்க்கும் போது பாட்டு பாடனும்னு தான் தோனுது....
அன்புடன்,
மனசு...
Hmm, an interesting view! :D
//பணக்கார பசங்க எதயுமே கையால தொடமாட்டங்க (சாப்பாட கூடத்தான்)...//
சூப்பர்ப் :)
உங்கள் வரவுக்கு நன்றி சன்சைன் மற்றும் அனுசுயா. கூடிய சீக்கிரம் புதிய பதிவு வந்துடும்.
அன்புடன்
மனசு...
Post a Comment
<< Home