உடலை கொஞ்சம் கவனி!!!
எங்க வீட்டு பின்னால ஒரு குளம் இருக்குங்க...அங்க குளிர்காலமா இருந்தாலும் சரி, வெயில் காலமா இருந்தாலும் சரி சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயசு வித்யாசம் இல்லாம எல்லாரும் ஓடிட்டு இருப்பாங்க. நல்ல உடற்பயிற்சி. காலை, மதியம்,சாயங்காலம் ஏன் இராத்திரி 11 மணிக்கு வரை கூட ஆளுங்கள பார்க்கலாம். இங்க வெயில் காலத்தில இருட்டுறதுக்கு நேரம் ஆகிடும். 10.30 வரைக்கும் சூரியன் இருக்கறதால வசதி. மதுரைல கீழவாசல் மாதிரி ஒரு நெருக்கடியான இடத்தில வாழ்ந்த எனக்கு இப்படி காற்றோட்டமான சூழல் ரெம்ப புதுசு. அதிலும் இந்த ஊரு மக்கள் ஆர்வமா ஒவ்வொருத்தரும் உடற்பயிற்சிய ஏதோ தனி ஒரு விசயம்னு நினைக்காம வாழ்க்கையில ஒரு பகுதியாகவே வச்சுருக்காங்க. சின்ன வயசுல இருந்து வெயில் காலம்னா நீச்சல், மலை ஏற்றம், குளிர் காலம்னா பனிச்சருக்குனு ஏதாவது ஒரு வகைல உடற்பயிற்சி பண்றாங்க. இந்த மக்கள்கிட்ட ஆரோக்கியம் பத்தின் விழிப்புணர்வு பற்றி கண்டிப்பா எழுதனும்னு தோனிச்சு. அதான் நான் இந்த விசயத்த பதிவு பண்றேன்.
இந்த இடத்துல நான் ஒரு விசயத்த ரெம்ப அழுத்தமா சொல்லனும். உடற்பயிற்சியை எங்க அம்மா வாழ்க்கைல பண்ணிருந்தாங்கன்னா இன்னிக்கு அவங்க சர்க்கரை வியாதியால அவதிப்பட்டிருக்க மாட்டாங்க. கொஞ்சமாவது அதன் தாக்கத்தில இருந்து தப்பிச்சிருக்கலாம். இன்னிக்கு பல பெண்களுக்கு உடற்பயிற்சியோட முக்கியத்துவத்தை தெரியப்படுத்தனும்கற நோக்கத்தோடதான் இந்த பதிவ போடறேன்.
உடற்பயிற்சினா ஏதோ கல்லு தூக்குறது, கற்லா கட்டை சுத்துறதுதான் நினைக்காதிங்க. நடக்குறது கூட ரெம்ப நல்ல உடற்பயிற்சிதான். நடக்குறதுன்ன சும்மா ஆமை மாதிரி இல்லிங்க. கொஞ்சம் கை கால் வீசி வேர்க்க விறுவிறுக்க நடக்கனும். ஆனா நம்ம பொண்ணுங்களுக்கு அது கூட ஒரு பெரிய சுமை. கொஞ்சம் வேகமா நடங்கப்பானு சொன்னா அவங்களுக்கு ஏதோ வேப்பங்காய் சாப்பிடுற மாதிரி. மூஞ்சி போற போக்கே வேற மாதிரி இருக்கும். இதோட சிலர் சொல்ற சால்ஜாப்பு இருக்கே, அய்யோ எனக்க நேரமே இல்லப்பானு சொல்லுவாங்க, ஏதோ கடவுள் இவங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமா 20 மணி நேரமும் மத்தவுங்களுக்கு எல்லாம் 24 மணி நேரமும் கொடுத்தா மாதிரி. ஆனா காலைல இழுத்துப் போத்திட்டு தூங்குறதுல இவங்க பெரிய ஆளுங்க(பசங்க கூடத்தான்!).
இத விட இன்னொரு பெரிய கொடுமை வீட்டுக்குள்ள... காலைல 11 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 11 மணி வரைக்கும் நேரத்த வீணடிக்கிற விசயம் தொலைக்காட்சி தொடர்கள்... அதுக்கு முன்னால உக்காந்துக்கிட்டு உச் உச்னு உச்சு கொட்டுவாங்களே தவிர... எழுந்து ஒரு நடை காத்தாட, காலாற வெளில போயிட்டு வர மாட்டாங்க. காலைல இருந்து டி.வி முன்னால இவங்களால நேரத்தை வீண்டிக்க முடிகிறதே தவிர தன் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு 1 மணி நேரம் செலவிட முடிய மாட்டேன்கிறாங்கப்பா. இங்க குழந்தை பெற்றதுக்கப்புறமும் உடற்பயிற்சி பண்றாங்க. தன் உடலை ஆரோக்கியமா வச்சுகிடறாங்க. நம்ம பெண்கள்கிட்ட ஏன் இந்த மனப்பாண்மை இல்லை? இங்க இருக்கிற மத்த விசயமெல்லாம் கத்துகிட்டு தப்பு தப்பா பண்ண முடிகிற நம்மால ஏன் நல்ல விசயத்த கிரகிச்சு கிட முடியல ?
யோகா வோட பிறப்பிடம் இந்தியா. ஆனா இங்க ரெம்ப பிரபலம்க. அதோட அத கத்துகிடறதுக்கும் இங்க நல்ல வரவேற்பு, ஆனா நம்ம ஊருல அத மதிக்கிறதே கிடையாது.. அதுதான் பெரிய வருத்தம். இன்னொரு விசயம் என்னனா, பிரசவத்துக்கு முதல் நாள் வரைக்கும் கூட யோகா பண்றாங்க அதுக்குனு தனியா பயிற்சி இருக்கு. நம்ம ஊருல கரு உருவான உடனேயே அதை செய்யாத இத செய்யாதேனு சொல்லி அவங்கள சீக்காளி மாதிரி ஆக்கி ஒன்னுமே செய்ய விடறதில்ல. கிட்டதட்ட "பெட் ரெஸ்ட்" எடுக்க சொல்லிருவாங்க. ஆனா இங்க, நீச்சல், சைக்கிளிங் எல்லாம் போறாங்க. இங்க மருத்துவர்கள் கூறும் அறிவுரை, "குழந்தை இயற்கைக்கு மாறுபாடாக உருவாகி இருந்தால் அதனால் கருப்பையில் தங்க முடியாது என்பதே."
இங்க இருக்க டாக்டர்ஸ் நீங்க நோயாளி இல்ல, நீங்க ஆடலாம் பாடலாம்னு கருத்தரிச்சவங்க கிட்ட சொல்றப்போ அவங்களுக்கு மனசலவில தைரியம் கிடைக்கிது. இங்க பிறக்கிற குழந்தைங்கள்ள 100 க்கு 99 சதவீதம் இயற்கையான் முறைல குழந்தை பிறக்குது. அறுவை சிகிச்சை அப்படிங்கதே அபூர்வம். அதுமட்டும் இல்லிங்க 30,40 வயசுல கூட குழந்தை பெத்துகிடறாங்க.
ஆரோக்கியமான அளவான உணவு, போதுமான உடற்பயிற்சி, சுத்தமான சுற்றுப்புறம்னு இருக்கிற இடத்தையே சொர்க்கமா மாற்றி வாழறாங்க.
நம்ம இன்னும் உண்வு பொருள்ல கலப்படம்,சோம்பேறித்தனம், சுற்றுப்புறத்த சுத்தமா வைச்சுகிடாம அசிங்கப்படுத்துறது, இந்த மாதிரி விசயத்தால இருகிற இடத்தையே நரகமாகிட்டு இருக்கிறோம்.
இன்னொரு முக்கியமான விசயம். இன்னிக்கு நிறைய பெண்களுக்கு பிரசவத்தில சிக்கல். என்னனு கேக்குறிங்களா. குழந்தை வயித்துக்குள்ள பத்திரமா இருக்கறதுக்காக கடவுள் வச்ச தண்ணீர்குடம் வத்திப்போயி நிறைய குழந்தைகள் இறந்தே பிறக்கிதுங்க. எனக்கு தெரிஞ்சவங்க ரெண்டு பேருக்கு இப்படி ஆகிடுச்சு. இதெல்லாம், நம்ம ஆரோக்கியத்துல நம்மலே அக்கரை இல்லாம இருக்கிறதுதான் காரணம். இனிமேலாவது கொஞ்சம் திருந்தலாம். சும்மா டிவி சினிமா மோகத்தில கண்ட விசயங்கள பாத்து கெடறோம். ஆனா நம்மளுக்கு முக்கியமான விசயங்கள கோட்டை விட்டுடறோம்.
இந்த பதிவ இத்தோட முடிச்சுக்கிறேன். அடுத்த பதிவுல இதப்பத்தி இன்னும் பேசலாம்.
அன்புடன்,
மனசின் மனசு... :-)
7 Comments:
அட நீங்க முந்திக்கிட்டீங்க இத நான் எழுதலாம்னு நெனச்சிருந்தேன். பரவாயில்ல நல்ல விசயம் யார் எழுதுனா என்ன.
இதுல அவங்க குழந்தை பிறந்த பிறகு குழந்தைகள் விளையாடும்போது அம்மாவும் கூட அவங்களுக்கு இணையா விளையாடறத பாக்கும்போது. எனக்கு நம்ம நாட்டு தாய்மார்கள நெனச்சிக்குவேன். நம்ம ஊருல குழந்தை பிறந்தவுடன் அவங்க ஏதோ வயசானவங்களா ஆயிடறாங்க குழந்தைகூட விளையாடற அம்மாக்கள பார்க்கறது இந்தியாவில் அபூர்வம்.
ம் இன்னும் நெறய இருக்கு டைம் கிடைக்கும்போது விரிவா எழுதறேன்.
நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.
It's a great blog!! Just so you know, 1) I walk a lot 2) I don't watch TV 3) I've learnt Yoga (not practcing as regularly as I'd like though..) :D
உங்கள் பதிவுக்கும் பாராட்டுகளுக்கும் ரெம்ப நன்றி அனுசுயா, சன்சைன். நீங்க சொல்ற மாதிரி இன்னிக்கு எத்தனை தாயமார்கள் குழந்தைங்க கூட விளையாடுறாங்க_ விளையாட போற பிள்ளைய கூட பிடிச்சு இழுத்துட்டு வந்து பள்ளிக்கூட நுழைவுத்தேர்வுக்கு 3 வயசுலயே படிக்க வைக்கிறாங்க. இந்த கொடுமய எங்க போயி சொல்றது !!
அன்புடன்,
மனசின் மனசு...
மனசுக்கு தெரியுது உடல் பயிற்சி செய்யுறது நல்லதுன்னு..ஆனா இந்த மனசு புரிஞ்சிக்க மாட்டேங்கிறதே :(
மனசு சீக்கிரம் மாறி, காலம் ஓடிவிடும் முன்னே தினமும் ஓடத் துவங்கனும்.
நன்றி!
அடேய் மனசு..செந்தில் தானே..இப்படி கேள்வி கேட்குறேன்னு கோவிச்சுக்காத..வெறும் ஜெர்மனி அப்படிங்றதை மட்டும் வச்சு நான் எப்படி கண்டு பிடிக்கிறது..சரி..ஏதும் புகைபடம் இருக்கும்னு பாத்தா அதுவும் இல்லை..பேராவது வச்சு கண்டுபிடிக்கலாம்னா மனசுங்குற..என்ன பண்றது கண்ணா..முதல்ல என்னை தெளிய வை..அப்புறம் உனக்கு ஜஸ்வந்த் மின் அஞ்சல் முகவரி தெரிய வைக்கிறேன்.. இப்போதைக்கு வரட்டா.
Hmm.. disappeared again?!
ரொம்ப correct ஆ சொல்லிருகிறீங்க மனசு, பெண்கள் atleast walking ஆச்சும் போகலாம் daily.
Post a Comment
<< Home