அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Saturday, June 23, 2007

விவசாயி... விவசாயி...


இந்தியா ஒரு விவசாய நாடு அப்படினு ஆரம்பப்பள்ளிக்கூடத்தில படிச்சது இன்னமும் ஞாபகம் இருக்கு. இதோட அர்த்தம் இந்தியாவில விவசாயம்தான் பெரிய தொழில் அப்படினும் சொல்வாங்க. இன்னிக்கு நிலைமை வேறதான் அப்படினாலும், விவசாயம் இல்லைனா ஒரு நாடு சுடுகாடு ஆகிடும். இன்னிக்கு நிலமைல விவசாயிங்க நிலம படுமோசம். ஒன்னு அவங்களால பயனடையறவங்க பெரிய அளவில வியாபாரம் பண்றவங்களோ அல்லது அவங்கள சுரண்டி சாப்பிடுறவங்களாவோ இருக்காங்க அப்படிங்கறதுததான் வேதனை. மொத்தத்தில அவங்களோட உழைப்பப உறிஞ்சுற அட்டைகளாதான் எல்லாருமே இருக்காங்க.

இங்க வாரா வாரம் விவசாயிகள் அவங்க அவங்க தோட்டத்தில விளையிற பொருள்கள கொண்டுவந்து வியாபாரம் பண்ணுவாங்க. நம்ம ஊருல மாதிரி சில்லறை கடைகள்ல கிடைக்கிறத விட இங்க விலை குறைவா இருக்காது. இங்க விலை அதிகம். அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம். அதேமாதிரி நம்ம ஊருமாதிரி பேரம் பேசுறது எல்லாம் கிடையாது. பொருளுக்கான விலை எழுதிருப்பாங்க. எவ்வளவு வேணுமோ வாங்கிக்கலாம். அவ்வளவுதான்.

இதே நம்ம ஊரு மார்க்கெட்டுனா, அவன் ஏண்டா வியாபாரம் பாக்க வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு விலை கேப்பாங்க. அதவிட தெருவில கொண்டுவரவங்ககிட்ட ஒரு விலை கேப்பாங்க பாருங்க அடடா... விலை கேக்குறா அழகே அழகு. அவங்க ஒரு விலை சொல்லி அதுல ஒரு 50 பைசாவாவது குறைச்சு வாங்கலைனா குழம்புல அந்த காய் வேகவே வேகாது.

அப்படி ஒரு நினைப்பு நம்ம மக்களுக்கு. ஆக மொத்தம் நம்ம ஊரு விவசாயி, வேகாத வெயிலில வேர்வை சிந்தி உழைக்கிறதோட மிச்சம் அவனோட வருமை மட்டுமே. அதுக்கு மேல என்ன இருக்கு அவங்ககிட்ட....

இதப்படிக்கிறவங்களாவது இனிமேல் மார்கெட் பக்கம் போனா விவசாயி சொல்றவிலை குடுத்து வாங்க முடியுமானு பாருங்க. தயவுசெய்து பேரம் பேசாதிங்க... நீங்க குடுக்கிறது அவங்க உழைப்புக்கான கூலி அவ்வளவுதான்.
விவசாயினு மட்டுமில்ல நிறைய இடங்கள்ல அப்படிதான். ஒவ்வொருத்தருக்- கும் நாம ஒவ்வொரு தராசு வச்சுருக்கோம். இந்த நிலம மாறனும்.
என்னிக்கு நம்ம விவசாயிகளையும் மதிச்சு அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் குடுக்க போறோமோ அப்போதான் இந்தியா வல்லரசு ஆகும். இல்லைனா இந்தியா ஏச்சுப் பிழைக்கிற வரிசைலதான் இருக்கும். உங்க உழைப்புக்கு உங்க அலுகலகத்தில பேரம் பேசினா என்ன ஆகும்... ???அப்படி நினச்சுப்பாருங்க.... இது என்னோட சின்ன வேண்டுகோள்...


அன்புடன்,

மனசு...

10 Comments:

Blogger MyFriend said...

ஐ.. நாந்தான் ஃபர்ஸ்ட்.. ;-)

5:26 AM  
Blogger MyFriend said...

படத்தை பார்த்ததும் நீங்க மலேசியர் இல்ல சிங்கப்பூர் காரர்ன்னு நெனச்சேன்.. இங்கே இருக்கிற சந்தை போலவே இருக்கு. ;-)

5:26 AM  
Blogger மனசு... said...

வாங்க மைபிரண்ட், வருகைக்கு நன்றி, எந்த ஊரா இருந்தா என்ன, எல்லாம் நம்ம ஊருதான்.

5:35 AM  
Blogger மா சிவகுமார் said...

//இதப்படிக்கிறவங்களாவது இனிமேல் மார்கெட் பக்கம் போனா விவசாயி சொல்றவிலை குடுத்து வாங்க முடியுமானு பாருங்க. தயவுசெய்து பேரம் பேசாதிங்க...//

++1

அன்புடன்,

மா சிவகுமார்

5:51 AM  
Blogger ILA (a) இளா said...

///தயவுசெய்து பேரம் பேசாதிங்க... நீங்க குடுக்கிறது அவங்க உழைப்புக்கான கூலி அவ்வளவுதான். //

நல்லா சொன்னீங்க போங்க

5:17 PM  
Blogger மனசு... said...

வாங்க இளா... பதிவுக்கு நன்றி... ஏதோ எனக்கு தெரிஞ்ச விசயத்த சொல்றேன். கண்டிப்பா மக்கள் கேப்பாங்கனு ஒரு நம்பிக்கை...

5:15 AM  
Blogger Pandian R said...

அட. எனக்கு இயல்பாவே பேரம் பேச வராதுங்கிறேன்.

இப்போதைக்கு விவசாயிகளோட பெரிய பிரச்சினை பேரம் இல்லை. பெரிய முதலைகள். ரிலையன்சு, திரிநேத்திரா, ஸ்பென்சல் டெய்லி போன்றற பெரிய பண முதலைகள் சில்லரை விற்பனைக்கு வந்துவிட்ாரக்ள். உங்களை மாதிரி வெளியூருக்குச் சென்று திரும்ப சென்னை திரும்பியவர்களும், வெளியூரு கனவில் உள்ளவர்களும் (ச்ச்சி சும்மாச்சுக்கும்) அந்தக் கடையில்தான் வாங்குவேன் என்று அடம் பிடித்திருக்கும் நேரத்தில், கீரைக்கட்டு பெரியம்மா ரெம்பவே கலவரப்படுகிறார். விரைவில் பல்வேறு ஊர்களுக்கும் அந்தந்த அங்காடிகள் பகட்டுடன் கிளைகளைத் திறக்கவிருக்கின்றன. விவசாயிகளை அடியோடு ஒழித்துக்கட்டும் முதலாளித்துவ நடவடிக்கை இது.

தயவு செய்து விவசாயிகளை ஆதரியுங்கள். விவசாயிகளிடம்தானே அவர்கள் வாங்குகிறார்கள் என்கிற எகத்தாளமான பதில் வேண்டாம். பணம் கம்மியானால் விஷவிதை கலப்பையும் முதலைகள் கண்டு கொள்ளப்போவதில்லை. இவர்கள் வளர்ந்துவிட்டால், கீரையைத் தண்ணியில் அளசி, 'இதை எடுத்துப் போ ராசா' என்று வாஞ்சையாகக் கூறும் கீரைக்காரப் பெரியம்மாவும் இருக்கமாட்டார்கள்.

யோசிங்க மக்களே. உங்க மோகத்தை காய்கறியில் காட்ட வேண்டாம்.

6:40 AM  
Blogger மனசு... said...

வாங்க பாரதி, இப்ப சொன்னிங்களே 1000ல ஒரு வார்த்த. அன்பா காய் வாங்குறத விட்டுபுட்டு அங்க போயி அவன் சொல்றத எதுக்கு வாங்கனும். வெளிநாட்டு மோகம் இருக்குறவக வாங்குறாகனே வச்சுகிடலாம். நம்ம ஊருக்கு வந்தா நாம அந்த ஊருகாரவங்கதானே. எண்ணிக்கு நாளும் கிட்டிப்புல்லும், பம்பரமும் மறந்து போகுமா...???

6:45 AM  
Blogger Sumithra said...

Coming from an agricultural family myself, I can exactly undertsand what you are trying to say. Let's hope things will get better..

10:17 AM  
Blogger அனுசுயா said...

எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு போடுங்க.

1:09 AM  

Post a Comment

<< Home