கடன் வாங்குங்கள்.....கடனாளி ஆகுங்கள்.....
கடந்த மாதம் நடந்த நிகழ்வுதான் இந்த பதிவை எழுதத்தூண்டியது... மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி. நான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அந்த வங்கியிலிருந்து மாதம் ஒருமுறை எவ்வளவு பணம் வரவு கணக்கில் வந்தது எவ்வளவு பணம் எடுத்திருக்கிறோம் என்று அனுப்புவதுண்டு. சென்ற மாதம் புதியதாக ஒரு கடிதம். பிரித்துப்படிக்கையில் உங்களுக்காக அட்டகாசமான் ஒரு கடன் வசதி அளிக்க உள்ளோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. முகவரின் பெயரும் அவரது தொலைப்பேசி எண்ணும் அதில் இருந்தது. மற்ற கடிதங்களைப் போல இதுவும் வியாபார தந்திரம் என்றுஅ அலட்சியமாக விட்டுவிட்டேன். ஓரிரு நாட்கள் பிறகு அந்த முகவர் என்னுடைய தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்டு பேசினார். விபரத்தைச் சொல்லி நீங்கள் கடன் வாங்கும் எண்ணம் ஏதும் உள்ளதா என்று கேட்டார். நானும் ஆமானு சொன்னவுடன் நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட அந்த நாளில் வரச் சொல்லி இருந்தார்.
உபசரிப்போ அப்படி ஒரு உபசரிப்பு, காபி சாப்பிடுகிறீர்களா... தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு விட்டுத்தான் அந்த வங்கியில் ஆரம்பிப்பார்கள். "பணக்காரனாக வாழுங்கள்" என்று அடைமொழி இருக்கும் அந்த வங்கியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்த எனக்கு அதற்கு அப்புறம் அந்த வங்கியே அலர்ஜி ஆகி விட்டது. அப்படி படுத்திட்டங்கய்யா... படுத்திட்டாய்ங்க....
முதல்ல அவங்க கேட்ட கேள்வி, நாங்க உங்களுக்கு என்ன பண்ணனும்னு கேட்டாங்க... நானும் நீங்கதான் சாமி போன் போட்டு வரச்சொன்னிங்க... கடன் விசயமா அப்படினு சொன்னேன். சரி தேவையான விசயங்கள் எடுத்துட்டு வந்திங்களானு கேட்டாக... என்னோட சம்பள விபரம், வீட்டு இருப்பு பத்தின் விவரம், பாஸ்போர்ட் எல்லாம் கொடுத்த பின்னாடி எவ்வளவுக்கு கடன் வேணும்னு கேட்டாக. நானும் சும்மா ஒரு 1500 யூரோ குடுங்கனு கேட்டேன். எதுக்காகனு கேட்டாக... தாய்நாடு போயிட்டு வரலாம்னு இருக்கேனு சொன்னேன்.
அதுக்கு அப்புறம் நடந்ததே கூத்து... சாமி தாங்கல... ஏதேதோ பண்ணினாக, அப்புறம் ஒரு 5 நிமிசம் இருங்க நான் எங்க மேனேசர்கிட்ட பேசிட்டு வரேனு போனாக... நானும் விட்டத்த பாத்துக்கிட்டே ஒரு 30 நிமிசம் ஓடிப்போச்சு... அப்புறம் சிரிச்சுக்கிட்டே வந்தவுவ ஒரு பெரிய அணுகுண்ட தூக்கி போட்டாக பாருங்க... என்ன தெரியுமா.. கடன் குடுக்குறேனுதான்... அதுவும் மாச மாசம் ஒரே ஒரு யூரோ மட்டும் கட்டினா போதும்னு....என்ன நம்ம முடியலயா... என்னாலயும் தான்.... மொத்தமா கேளுங்க... ஆனா ஒரு கண்டிசன்....
என்ன தெரியுமா... நான் அந்த வங்கில ரெம்ப நாளா வாடிக்கையாளரா இருக்கறதுனால அவங்க எனக்கு பாலிசி குடுக்க முன்வந்தாங்க... எப்படினு கேக்குறிங்களா... வாழ்க்கை முழுசும் அந்த பாலிசி கட்ட சொலிதான். பாலிசிக்காக நீங்க ஒரு 75 யூரோ கட்ட வேண்டி இருக்கும். அப்புறமா விபத்துக்கான இன்சூரன்சு ஒரு 75 யூரோ அப்புறம் இன்னொரு 25 யூரோ... சோ மொத்தமா நீங்க ஒரு 175 யூரோ மட்டும்தான் கட்டவேண்டி இருக்கும்னு சொன்னாக பாருங்க.... அதோட இந்த பாலிசி எடுத்திங்கன்னா... 5 வருசத்துக்கு அப்புறம் உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுன்னா(எதுவும் ஆகாது அப்படினு சிருச்சுக்கிட்டே வேற சொன்னாங்க) உங்க குடும்பத்துக்கு 15000யூரோ குடுத்துருவோம்... ஆனா அதுக்கு முன்னால ஒன்னும் கிடையாது அப்படினு வேற... எனக்கு ரெம்ப குழப்பாமாகிப்போச்சு... நான் வீட்டுல கேக்கனும்னு சொன்னவுடனே என்ன ஒரு மாதிரி பாத்தங்க... சரி ஒரு நிமிசம் இருங்க நான் மேனேசர்கிட்ட பேசிட்டு வரேனுட்டு போனவுங்க அடுத்த 30 நிமிசத்துக்கு அப்ஸ்காண்டு...
மறுபடியும் சிரிச்சுக்கிட்டே வந்தவுங்க.... உங்களுக்காக நாங்க இன்னொரு விசயமும் செய்ய போறோம் அப்படினாங்க... இன்னிகே இந்த பாலிசி நீங்க எடுத்துக்கிடிங்கன்னா முதல் பிரிமியம் (75 யூரோ) நாங்களே உங்களுக்காக கட்டிடுவோம் அப்படின்னாங்க. மீதம் 100 யூரோ மட்டும் நீங்க கட்டுங்கனு சொன்னாங்க அப்புறமும் நான் வீட்டுல கேக்கனும்னு சொன்னதினால சரி நீங்க இந்த பாலிசி ஆப்பர் இன்னும் 2 நாள்ல முடியுது சோ இன்னிக்கு நீங்க இத அப்புறமா வாங்கினாலும் வாங்குவேனு ஒரு கையெழுத்து மட்டும் போடுங்கனு வாங்கிட்டாங்க... எனக்கு மனசு எல்லாம் ஒரே குழப்பம். நான் வேணானு சொன்னா விட்டுடுவிங்கள்ளனு கேட்டுட்டுதான் கையெழுத்த போட்டேன்.
அப்புறமா வீட்டுல கேட்டுட்டு ஒரு மனசா வேணாம்னு கொண்டு போயி குடுக்க போனா அன்னிக்கு இருந்தது வேற இன்னொருத்தர். அவரும் அவர் பங்குக்கு எல்லாத்தயும் கேட்டுட்டு, நான் வேணாம்னு சொன்னவுடனே என்ன ஒரு மாதிரி பாத்தாரு. அப்புறம் இருங்க நான் மேனேசர்கிட்ட பேசிட்டு வரேனு போனவரு கொஞ்சம் சீக்கிரமா 20 நிமிசத்தில வந்துட்டாரு. வந்து உங்களுக்காக இன்னொரு ஆப்பர் தரோம். இப்போ நீங்க இந்த பாலிசி வாங்கினிங்கன்னா, உங்களுக்காக நாங்களே மொத்தமா ஒரு மாச பிரிமியம் 175யூரோவும் கட்டுறோம் நீங்க அடுத்த மாசத்துல இருந்து கட்டுங்கனு சொன்னாங்க. ஒரு நிலையில இவிங்கள விட்டு ஓடிப்போயிறலாமானு தோனுச்சு... இல்ல கையெழுத்த போட்டு தொலச்சா விட்டுருவாங்களோனு கூட நினச்சேன். கடைசியா எனக்கு இன்சூரன்ஸ் எல்லாம் வேணாம் வெறும் லோன் மட்டும் கிடைக்குமானு கேட்டதுக்கு முடியாதுனு போட்டாங்க பாருங்க ஒரு போடு...
மொத்தத்துல 2 நாளு என்னய அலையவிட்டு மண்டைய காயவிட்டு அனுப்பிட்டாயங்க... முன்ன எல்லாம் பெரியவங்க பட்டினியா இருந்தாலும் இரு கடனாளியா இருக்காத அப்படினு சொல்லுவாங்க... இன்னிக்கு நிலமயே வேற... தனியார் வங்கிங்க போட்டி போட்டு லோன்குடுத்து மக்கள கடனாளியா ஆக்கி நல்லா காசு சம்பாதிக்கிறாங்க. வட்டி கொஞ்ச நஞ்சமல்ல. பட்டாணி தோத்து போயிருவான் அப்படி அநியாய வட்டி... ஒரு மாசம் பணம் கட்ட முடியலைனா அடுத்த மாசம் அபராதம் மட்டும் 500 ரூபாய். விளைவு கடன்வாங்கி கடனாளியா இருக்கறதுதான். தேவைக்கு கடன் வாங்குறது தப்பில்லை. ஆனால் அநியாத்துக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குறதுக்காக கடனை வாங்கி அந்த கடன் அடைக்கறதுக்குள்ள அந்த பொருள் வீணாப்போயிடறது...
கடன் இல்லாத வாழ்வுதான் சந்தோசமானது. தேவைகள சுருக்கிட்டா கடன் வாங்க அவசியமே இல்ல. ஆனா சந்தோசத்துக்காக கடன் வாங்கினா தினம் தினம் அந்த கடன் சுட்டுகிட்டே தான் இருக்கும்...
இதில கிரிடிட் கார்டு இருந்தா கேக்கவே வேண்டாம்... அதை பயண்படுத்துற ஒரு கலை... இல்லை கை இல்ல மொத்தமா சுட்டுடும்...
படிச்சவங்க கூட இதுக்கு விதி விலக்கு இல்லை... மக்கள் சிந்திப்பாங்களா....???
அன்புடன்,
மனசு...
8 Comments:
இங்கு ஒருதடவை ஒரு பேரங்காடியில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது இது மாதிரித்தான் ஒரு பெண் கடன் அட்டையை வாங்கிக்கோ அதில் உள்ள பல பயண்களை சொல்லிக்கொண்டிருந்தாள்.
நான் கடைசியாக சொன்னது இதுதான்
"என்னுடைய சம்பளத்துக்குள் செலவு செய்ய விரும்புகிறேன் அதற்கு எதற்க்கு இந்த அட்டை என்றேன்"
போய்விட்டாள் நகர்ந்து.
Hmm..so, the bankers are the same everywhere. The vultures. You are right about debts - the lesser the better.
நிஜம் தான் வடுவூர் குமார், வரவுக்குள் செலவு செய்ய தெரிந்தவர்களே புத்திசாலிகள். வரவுக்கு மேல் செலவு செய்தால் எதுவுமே மிஞ்சாது. உங்கள் வரவுக்கு நன்றி.
வாங்க சன்சைன், எல்லா இடத்திலயும் மனிதர்கள் ஒன்னு தானே. அதான் வங்கிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன். வித்யாசம் என்பது இருக்கும் இடத்தில் மட்டுமே. மத்தபடி ஒன்னுதான் :)
இந்த இன்சூரன்சு மாய்மாலங்களை தலையில் கட்ட வங்கிகள் துடிக்கின்றன. வேறு வழியில்லை. ஏனென்றால், நமது அன்பர்களில் சிலர், அட்டையை வைத்து செலவு செய்து மாட்டிக்கொண்டாலும், புரிந்து கொண்ட பலர், அட்டையை லிமிட்டாகப் பயன்படுத்தி, வட்டி இல்லாத காலத்துக்குள் மிகுந்த லாயலாகக் கட்டிவிடுகிறார்கள். :) அட்டையை இலவசமாகக் கொடுத்தாலும் லிமிட் மீறாத புத்திசாலிகள் செலவையும் சேர்த்து, மாட்டிக்கொள்ளும் அப்பாவிகளிடம் கறந்துவிடுகின்றன வங்கிகள்.
எவ்வளவுதான் பாதகமானாலும் சிரித்துக்கொண்டே சொல்வதுதான் அவர்களின் சிறந்த மனப்பாங்கு
வாழ்க வாழ்க
சரியா சொன்னிங்க பாரதி... சிரிச்சு சிரிச்சு தான் கழுத்தருக்கராங்க. அதுக்கு பேரு வாடிக்கையாளரிடம் நட்புடன் பேசுறதுனு வேற சொல்லிகிறாங்க....
ம்ம்ம்ம்
senthil, epdi da irukka.. I am fine. Now I am in US da. How islife da..Wife epdi da irukanga..
Take Care..
appappo blog pakkam vaa..
Hmm.. let me guess, you are being very busy again :-)
Hi,
Miga chariyaana karuththukal.
vaazhthukal. Nanbaa.
Post a Comment
<< Home