அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Thursday, July 20, 2006

ஆறு மனமே ஆறு!

"பூங்கோதை" அனுசுயா அவர்கள் ஆறு போடுவதற்கு அழைத்து கிட்டதட்ட அரைமாதமாகிவிட்டது. வேலை அதிகமாக இருந்தாலும் எப்படியாவது எழுதிவிடலாம் என்று ஒவ்வொரு நாளும் நினைத்தாலும் இன்றுதான் எழுத முடிந்தது....


நன்றி அனுசுயா...ஆறு-போடுவதற்கு அழைத்தீர்கள்...ஆனா எந்த ஆறைப்பற்றி எழுதுவது என்ற குழப்பம் கொஞ்ச நேரம் இருக்கத்தன் செய்தது... ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த ஆறைப்பற்றி சொன்னார்கள்.... எனக்கென்னவோ எனக்கு பிடித்த நடிக நடிகைகளையும், கனவுகளைகளையும் வெளியே சொல்வதைவிட நாம் கால ஓட்டத்தில் மறந்து போன ஆறை, வாழ்க்கையில் மனிதன் எப்படி இருந்தால் அவன் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவானென்ற ஆறை சொல்லவேண்டும் என்ற எண்ணமே வந்தது...


ஏற்கனவே சொன்னவிசயம்தான்...ஆனால் வலைப்பூவில் எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் இங்கு நான் இந்த ஆறை, எல்லோரும் கடை பிடிக்க வேண்டிய ஆறை இங்கே எழுதுகிறேன்...


மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளாக, கடவுள் சொன்னதாக கவிஞர் சொல்கிறார்... .


ஆறு கட்டளைகள்...

1.முதல் கட்டளை

எவனொருவன் செய்யமுடிந்ததை மட்டும் சொல்கிறானோ, அல்லது தான் சொன்ன சொல்லை காப்பாற்றுகிறானோ அவன் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.அவன் மனம் சந்தோசமாய் அமைதிப்படும்.


2.இரண்டாம் கட்டளை

எவனொருவன் வாழ்க்கை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, இன்பம் துன்பம் என்பவை இயற்கையின்(இறைவனின்) நியதி என்று எடுத்துக் கொள்கிறானோ அவன் மனம் துன்பப்படாது.


இந்த இரண்டு கட்டளைகள் அறிந்தவன் மனம் எப்போதும் எந்த நிலையிலும் அமைதியாய் இருக்கும்.

3.மூன்றாம் கட்டளை

உண்மை பேசுபவனையும், அடுத்தவருக்கு நன்மை செய்வதும் தன் வாழ்க்கையுன் கொள்கையாக கொண்டான் என்றால் உலகம் அவன் அழிந்த பிறகும் அவனை வாழ்த்தும். இந்த உயர்ந்த குணம் அவனை மேலும் மேலும் உயர்த்தும். உண்மை என்பது அன்பாய் இருக்கும் குணமேயன்றி வேறில்லை.


4.நான்காம் கட்டளை

தன் நிலை உயரும் போது தன்னுடன் இருந்தவர்களை மறவாத குணமும். உயர்ந்தபின்பும் அவர்களுடன் இருப்பவன் மனம் தெய்வத்துக்கு இணையானது. கடவுள் மட்டுமே அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி பாவிப்பவர். ஆகையால் இந்த குணம் கடவுளை ஒத்த குணம். பெரிய நிலைக்கு வந்த பிறகு, அகந்தை ஆணவம் ஆகிய குணங்களும் எவனொருவனுக்கு இல்லையோ அவன் பண்பாளன்.


இந்த நான்கு கட்டளைகள் அறிந்தவன் மனம் அமைதிப்படும்.ஆனந்தமாய் வாழ்வான்.

5.ஐந்தாம் கட்டளை

அடுததவர் பொருள் மீது ஆசை கொண்டவன், களவாளன், கோபம் கொண்டவன் இவன் மனித வடிவில் மிருகமேயன்றி வேறில்லை.


6.ஆறாம் கட்டளை

எல்லா உயிர்களிடத்திலும் இடம் பொருள் பாராமல் அன்பு செலுத்துபவனும், தனக்கு உதவி செய்தவருக்கு நன்றி மறாவாமல் இருப்பவனும், கருணை மிக்கவனும் கடவுளின் உருவமேயன்றி வேறில்லை.


இதில் மிருக உணர்வு கொண்ட மனித மனம் கள்ளமனம், தெய்வமனம் கொண்டவன் சிறு குழந்தையின் மனம் போன்றவன்.

இந்த ஆறு கட்டளைகளை உணர்ந்து அதை எவனொருவன் தன் வாழ்க்கையில் பின்பற்றுகிறானோ, அவன் மனமே ஆண்டவன் வாழ்கின்ற வெள்ளைமனம் என்கிறார் கவிஞர். உணர்ந்து தான் சொல்லி இருக்கிறார்.


இந்த பாடலை கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்...


அன்புடன்,
மனசு...

7 Comments:

Blogger அனுசுயா said...

மனசுங்கற பேர்ல ப்ளாக் ஆரம்பிச்சதால மனச பத்தியே ஆறு பதிவு போட்டுட்டீங்க. உங்க ஆறு வித்தியாசமா இருக்குது. இதையெல்லாம் இந்த காலத்துல யாருங்க கடைபிடிக்க போறாங்க. ஏதோ படிக்கறதோட சரி.

அப்புறம் என் பேர பூங்கோதைனு மாத்தீட்டீங்களே? பரவாயில்லை.

9:57 PM  
Blogger மனசு... said...

சரியா சொன்னிங்க... இதை எல்லாம் இந்த காலத்தில யாரு கடை பிடிக்க போறாங்கன்னு... இப்போதைக்கு மனிதனோட முக்கியத் தேவை பணம்னு ஆகிப்போச்சுங்க.. அதுனால வர விபரீதம் கொஞ்ச நஞ்சமல்ல...

மனிதன் மனித நேயத்தையும், அன்பு, கருணைங்கற விசயத்தையும் பத்தி யோசிக்க வேண்டியிருக்கு... இல்லைனா இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு அயல்நாட்டு காரன் வந்து நமக்கு சொல்லிக்குடுத்தா ஒருவேளை நமக்கு உரைக்குமோ என்னவோ...

உங்க பேரை பூங்கோதைனு மாற்றவில்லை. உங்களுக்கு கொடுத்த பட்டம் அது. 23ம் புலிகேசி ஸ்டைலில் சொல்வதென்றால்... பூவைப்பற்றி நிறைய பதிவு போடுவதால் இன்றிலிருந்து நீங்கள் "பூங்கோதை" அனுசுயா என்று அழைக்கப் படுவீர்களாக!!!

அன்புடம்,
மனசு...

12:09 AM  
Blogger Sumithra said...

Hmm, 6 commandments, eh? I think I always make an effort to follow most of what you've said (but I don't always succeed ;D)

10:32 PM  
Blogger Sumithra said...

Let me guess.... you've been very busy and have no time at all ;-)

10:37 PM  
Blogger மனசு... said...

Hello Sunshine,
Thats true... but soon i will come back with an intresting discussion :-)
Sorry folks...

Regards,
Manasu...

5:46 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே புரியும்"

கேட்டால் போயிற்று. இதோ பாடல்:

ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்

"ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...."

மேலே கூறிய வரிகளில் "ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. இங்கு ஆறு சொல்ல வேண்டியிருப்பதுவே எனது எனது ஆறு பற்றியப் பதிவின் தலைப்புக்கு காரணம். பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/blog-post_23.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

6:31 PM  
Blogger மனசு... said...

வாங்க டோண்டு ராகவன் அவர்களே,நீங்க எனக்கு முன்னாலேயெ ஆறு கட்டளைகள் பத்தி எழுதிட்டிங்க. துரதிஷ்டவசமா நான் உங்க வலைப்பூவை பார்க்கவில்லை. இல்லைனா வேற எதாவது ஆறு எழுதியிருப்பேன். சரி போகட்டும் நல்ல விசயத்த எத்தனை பேரு சொன்னா என்ன. அதை கேட்டுகிட்டா சரிதான்.

உங்களோட முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,
மனசு...

12:35 AM  

Post a Comment

<< Home