அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Wednesday, November 15, 2006

அய்யா இங்க கொஞ்சம் கவனிங்க...!!!









நேத்து கூகுள் வீடியோஸ்ல இந்தியாவில விவசாயம் செய்யிறத பத்தி ஒரு 25 நிமிட படம் போட்டிருந்தாங்க. அத பாத்தேன்... அம்மாடியோவ், உடம்புல இருந்து உயிர் வரைக்கும் எல்லாம் நடுங்கி போச்சு... இவ்வளவு விசயம் நடந்தும் இன்னும் விவரம் புரியாம இருக்கோமேனு. செயற்கை வேதியல் உரத்தால வர பாதிப்ப பத்திதான் அந்த படம். வாழ்க்கைல மறக்க முடியாத 25 நிமிடங்களப்பா.... எல்லாம் நம்ம மேல்நாடுகள்ல இருந்தும் உள்நாட்டில தயாரிக்கற உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தான். மேலை நாடுகள் எல்லாம் காலிபண்ணினா போதும் சாமினு நம்ம ஊர குப்ப கிடங்கு மாதிரி நினச்சுட்டு இங்க வந்து எல்லாத்தயும் கொட்டுறானுங்க... இங்க இருக்கிறவங்களும் விவரம் புரியாம வாங்கி எல்லாத்தயும் உபயோகிச்சதோட விளைவுகள்தான் அந்த வீடியோல இருக்க விசயம். வெக்கமே இல்லாம மேலை நாடுகள் இந்தமாதிரி பூச்சி கொல்லிகளை நம்ம ஊருல விக்கிறாங்க... இது போதாதுனு நிறைய மாத்திரைகள் கூட இப்படி விற்கறதுதான் வேதனையான விசயம்... இதே விசயத்த ஆவங்கள திங்க சொன்ன பண்ணுவானாங்கறதுதான் கேள்வி....?

சரி நாட்டுக்கு உருப்படியா ஒரு காரியம் செய்யலாமுன்னு, இத ஒரு ரிப்போர்ட்டா தயார் பண்ணி ஆந்த கூகுள் லிங்கயும் சேர்த்து "சுகாதார அமைச்சருக்கும்" , நாட்டின் "முதல் குடிமகனான ஜனாதிபதிக்கும்" தனித்தனியா மின்னஞ்சல் அனுப்பினேன். ஜனாதிபதியோட மின்னஞ்சல் எப்போவும் வேலை செய்யும். அதுல வர விசயத்த கூட இணையத் தளத்திலயும் போடுவாங்க.

ஆனா அமைச்சருக்கு அனுப்பினது போன வேகத்தில திரும்ப வந்திருச்சு. எல்லா அரசு விசயங்களும் இப்படித்தான் போல... அரசு இதை கவனிக்குமா...?
மாநிலமோ மத்தியோ எல்லாம் இப்படித்தானா...?

இத விட இன்னொரு கொடுமைய கொஞ்ச நாளைக்கு முன்னால பார்த்தேன். மதுரை மாநகராட்சியோட இணையத்தளத்துல அவங்களை தொடர்பு கொள்றதுக்கு யாகூ மின்னஞ்சல் முகவரிய குடுத்துருந்தாங்க. மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாநகராட்சினு பீத்திகிடறதோட நிலமையே இப்படியானு நொந்து போயிட்டேன். இதுதான் மின்னஞ்சல் முகவரி mducorp@yahoo.com

முதல் பக்கத்தில எல்லாம் பளபளனுதான் இருக்கு... ஒரு மாநகராட்சிக்காக ஒரு தனியான மின்னஞ்சல் கொடுக்க முடியாதா???? இதுதான் இன்னிக்கு நிலமை. அரசாங்கத்தில தம்பிகளுக்கு கொடுப்பதற்கு பணம் இருக்கு, இதுக்குதான் இல்லை. காலக்கொடுமை.

சரி.... விசயம் என்னனா....மேல இருக்கிற படங்கள்ல ஒன்னு எனக்கு தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிருக்கிங்கனு திரும்பி வந்த மின்னஞ்சல், இன்னொன்று சுகாதாரத்துறையின் இணையத்தளத்தில கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி. இரண்டு படங்களையும் தெளிவா பாருங்க...

மின்னஞ்சல் முகவரி மாறும் பட்சத்தில் அதை மாற்றுவதற்கு கூடவா நேரமில்லை? அல்லது சுகாதார அமைச்சர் அந்த மின்னஞ்சலையே உபயோகப்படுத்துவதில்லையா???

உங்களுக்காக அந்த பக்கத்தை இங்கே தர்றேன்... இத்த நான் எங்க போயி சொல்றது மாமோய்ய்ய்ய்ய்ய்!!! யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.... நேரம் கிடச்சா இந்த கூகுள் வீடியோவயும் பாருங்க...

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282&q=india


அன்புடன்,
மனசு...

8 Comments:

Blogger Pandian R said...

அய்யா பெரியவரே,
நீங்க சொன்ன அரசாங்க ஈமெயில் சமசாரங்கள் எல்லாம் நல்லாத்தேன் இருக்கு. ஆனா, அங்க அனுப்பினதுக்கு எல்லாம் பதில் வரும்னு நினைச்சிருக்கீங்க. ஒரே நகைச்சுவை போங்க. அப்துல்கலாம் பதில் அனுப்புறாருன்னா, மத்தவிங்க அனுப்புவாய்ங்களா. மதுரை மாநகராச்சி அஞ்சல் எப்படி யாகூல இருக்குன்னு கேள்வி கேக்கிறீரு. ஏற்கனவே இருக்கிற ஈமெயில வெச்சு இவிங்க என்ன செய்துபுட்டாய்ங்கன்றேன். கலெக்டரு, விஏஓ, கமிசனர்னு எல்லாத்துக்கும் மெயில் அட்ரசு இருக்கப்போய். எல்லாரும் பயன்படுத்தினா தேவலைதான்.

சரி சரி. இதெல்லாம் வெட்டிப்பேச்சு.

மேட்டருக்கு வருவோம்.
பயிர், பூச்சிமருந்து ரெண்டும் ஒன்னுக்கொன்னு பிரிய முடியாதபடி சேர்ந்து போச்சு. மண்ணுல முன்ன மாதிரி வளம் இருக்கிறதில்ல. உப்பைப் போட்டு விளைய வைக்கிற மண்ணுல இயற்கை சத்து போயிடுது. அதுக்கப்புறமா உப்புலயே விளையிது. அதுக்கப்புறமா பூச்சி அடில நஷ்டப்படாம இருக்க ஒரே வழி என்னா? பூச்சி மருந்து அடிப்பதுதானே. நஷ்டப்படாம இருக்கணும்னா அவன் மருந்து அடிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளோதான். என்ன செய்ய.

இதுக்கு அவனை குத்தம் சொல்லி புண்ணியமில்ல. சொல்லி வெச்சமாதிரி ஒவ்வொரு வருசமும் விவசாயத்தை மறந்துபோட்டு பட்ஜெட் போடுறீங்க. அதுல ஆகறமாதிரி அராய்சியோ, அதோட பலனோ நடக்கிறமாதிரி வெளில தெரியவே இல்ல. ஆதி காலத்தில எப்படி பண்ணினோமோ அதே மாதிரித்தான் இப்பவும் பண்ணிட்டு இருக்கோம், (கதிர் அடிக்கிற மெசினத் தவிற). ஆனா, நீங்க இருக்கிற துறையில வளர்ச்சி இருக்கா இல்லையா. வேகத்தில எவ்வளவு வித்தியாசம் பாருங்க.

விவசாயம் சம்பந்தப்பட்ட துறையில ஆராய்சிக்கு நிறைய பணம் போடனும், அந்த ஆராய்சிகளை ஊக்குவிக்கனும். விவசாயம் கனரகம் போன்ற துறையில ஒரு நாடு அடையிற வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. ஐடீல வளருது, வளருதுன்னா, அதுல உங்களோட பங்கு என்ன. சப் கான்ட்ராக்டு வேலையத்தானே ரெம்ப பேரு பார்த்துட்டு திரியறோம். நாளைக்கி இன்னொருத்தன் வந்தா, நினைச்சிப் பாக்கனும்ல.

ஐடி கம்பெனி வெச்சிக்கிறதுக்கு அனுமதி குடுத்தா கம்பெனிக்காரன் காசு குடுப்பான், நம்மளை மாதிரி உடம்பு வலையாதவிங்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயத்துக்கு செய்தா விவசாயி காசு குடுப்பானா அப்டின்னு கூட நம்மாளு யோசிச்சிருப்பானோ?

இது எல்லாம் இல்லாம போக, இப்ப பிடி ரக பயிர் வேற வந்து பயமுருத்திட்டு இருக்கு. அதில்லாம வேலை பார்க்க ஆளில்லை. இருக்கிற ஆள் கேக்கிற கூலி கட்டுபடி ஆகலை.

எங்கே செல்லும் இந்தப் பாதை??? பாடிக்கிட்டே வடக்க போயி, தற்கொலை பண்ணிக்கிட்ட விவசாயி சமாதியில பூ வெச்சிட்டு வரலாம் வாங்க. முடிஞ்சா ஒவ்வொரு விவசாயி காதிலயும் ஒரு பூ. ஓகேவா.

9:09 AM  
Blogger அனுசுயா said...

//விவசாயம் சம்பந்தப்பட்ட துறையில ஆராய்சிக்கு நிறைய பணம் போடனும், அந்த ஆராய்சிகளை ஊக்குவிக்கனும். விவசாயம் கனரகம் போன்ற துறையில ஒரு நாடு அடையிற வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி//

Nalla sonnega. India oru vivashaya naadunnu padathula padikrathoda sari. Maththapadi vivasayathukaga padichavanga enna senchirukkom?

11:17 PM  
Blogger மனசு... said...

பாரதி...
//இதுக்கு அவனை குத்தம் சொல்லி புண்ணியமில்ல. சொல்லி வெச்சமாதிரி ஒவ்வொரு வருசமும் விவசாயத்தை மறந்துபோட்டு பட்ஜெட் போடுறீங்க. //

சரியாத்தான் சொல்லிருக்கிங்க... இதுக்கு இவ்வளவுனு போடுறப்போ விவசாயத்துக்குனு ஒதுக்குற நிதி எவ்வளவு குறைச்சல்னு பட்ஜெட்டை பாத்தா தெரியும்...

//ஐடீல வளருது, வளருதுன்னா, அதுல உங்களோட பங்கு என்ன. சப் கான்ட்ராக்டு வேலையத்தானே ரெம்ப பேரு பார்த்துட்டு திரியறோம். நாளைக்கி இன்னொருத்தன் வந்தா, நினைச்சிப் பாக்கனும்ல.//

கண்டிப்பா... நிலைமை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது...2001ல் நடந்த மாதிரி மறுபடியும் நடக்க வாய்ப்பு இல்லைனும் சொல்ல முடியாது... நீங்க சொல்றமாதிரி இன்னமும் சப் காண்டிராக்ட் மாதிரிதான் ஐடிலயும் வேலை பாக்கிறோம், உதாரணமா பிபிஓ. ஹீ ஹீ ஹீ
ஐடி கம்பெனி வெச்சிக்கிறதுக்கு அனுமதி குடுத்தா கம்பெனிக்காரன் காசு குடுப்பான், நம்மளை மாதிரி உடம்பு வலையாதவிங்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயத்துக்கு செய்தா விவசாயி காசு குடுப்பானா அப்டின்னு கூட நம்மாளு யோசிச்சிருப்பானோ?//

கண்டிப்பா யோசிச்சுருப்பாங்க... அரசாங்கத்துக்கு வருமானம் குறைவுனு கூட யோசிச்சுருக்கலாம்...

//இது எல்லாம் இல்லாம போக, இப்ப பிடி ரக பயிர் வேற வந்து பயமுருத்திட்டு இருக்கு.//

ம்ம்ம் முந்தா நாள் கூட ஒரு புத்தகத்தில படிச்சேன். விவசாயிக்கே தெரியாம, நிலத்தை மட்டும் குத்தகைக்கு வாங்கி இந்தமாதிரி பிடி ரக நெல்லை நட்டு விளைச்சல் எப்படி இருக்குனு வளத்து பாத்துட்டு இருக்காங்க... இது எப்படி இருக்கு... இதுவே மேலை நாடா இருந்தா அந்த கம்பெனி மேல கேஸ் போட்டு கிழி கிழினு கிழிச்சு நாறடிச்சுருப்பாங்க...
நம்ம ஊருல வாயில விரல வச்சு சூப்பிட்டு போயிட்டே இருக்க வேண்டியதான்...

//எங்கே செல்லும் இந்தப் பாதை??? பாடிக்கிட்டே வடக்க போயி, தற்கொலை பண்ணிக்கிட்ட விவசாயி சமாதியில பூ வெச்சிட்டு வரலாம் வாங்க.//

கண்டிப்பா ஆரோக்கியமான பாதை இல்லை. இதுக்கெல்லாம் ஒரு மாற்று கண்டிப்பா கண்டுபிடிக்கனும்.

அது என்ன???? இதுதான் இன்னிக்கு இருக்கிற கேள்வி...

அனுசுயா...
// Maththapadi vivasayathukaga padichavanga enna senchirukkom? //

நாம ஒன்னுமே செய்யலை... இன்னும் சொல்லப்ப்போனா செய்யனும்னு 100 க்கு 97 பேர் நினைக்கிறது கூட இல்லை... ஏதோ வேலைக்கு போனமா சம்பாதிச்சோமா... நல்ல செலவு பண்ணினோமானு ஒரு நாட்டை பத்தின அக்கரையே இல்லாம இருக்கிறோம் அதுதான் நிஜம். சில நேரங்களில் நிஜம் சுடும். இதுவும் நிஜம்...

ஏதாவது செய்யனும்னு நினைக்கிறவங்க இங்க பதில் கூட போட முடியாதா என்ன??? இதுல இருந்தே தெரியுமே உங்களுக்கு நம்மளுக்கு நாட்டுமேல அக்கரை எவ்வளவு இருக்குனு...

அன்புடன்,
மனசு...

12:56 AM  
Anonymous Anonymous said...

manasu,
Good post...

they are interestless in emails, because the 'inbox' will turn to be 'petition box'!

also, they dont want the people to advance in technolgoy/ knowledge, as it is always dangerous for them. :-)

10:23 AM  
Blogger மனசு... said...

வாங்க மணிவண்ணன், ம்ம்ம் நீங்க சொல்றதும் சரிதான். மக்கள் புத்திசாலிகளா இருக்க கூடாதுனு அரசாங்கத்தில இருக்கவங்க நினைக்கிறாங்க... அப்படி புத்திசாலிங்களா ஆகிட்டா அவங்களுக்கு ஆபத்தாகிப்போகும்...
இந்த நிலமைலாம் மாறினாத்தான் நம்ம ஊரு நல்ல ஊராகும்.. இல்லைனா இன்னும் நாறிடும்...


உங்களோட முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மணி...

அன்புடன்,
மனசு...

12:03 PM  
Blogger Sumithra said...

At least you tried sending mails. And you partly succeded - that's a good sign of changing times.

I'm not even going to say anything about our politicians and Govt officials. Frankly, its my humble opinion that, in general, the entire indian society is based on double standards and falsehood - politicians who come from this society will naturally be no better.

5:59 AM  
Blogger மனசு... said...

வாங்க சன்சைன்,
ம்ம்ம்ம், அரசியல்வாதிங்கரவங்க நம்மளமாதிரி மனிதர்கள்தான், நாம வளர்ந்த அதே சமூகத்தில வளர்ந்தவங்க சமூக அக்கரை கொண்டவங்களா இருக்கனும். ஆனா மேலிடத்துக்கு போனவுடனே ஒரு சிலரை தவிர மாறிடறாங்க அல்லது மாத்திடறாங்க... சமூகத்துக்கு நம்மலாலான விசயத்த செய்யனும்னு ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒருவகைல உதவி செஞ்சாலே போதும் சமூகம் முன்னேறிடும்.

என்னதான் சமூக தொண்டு நிறுவனங்கள் ஆயிரம் இருந்தாலும் அரசாங்கம் என்கிற அமைப்போட பலம் பெரியது. நினைச்சா நிறய விசயம் பண்ணலாம். ஆனா இங்க பண்ற அரசியல்ல எதுவுமே நடக்காது...ம்ம்ம் என்னதான் ஆகும்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்...

அன்புடன்,
மனசு...

7:09 AM  
Blogger மு.கார்த்திகேயன் said...

நண்பா, மெல்ல வந்து படிச்சுட்டு ஒரு கமென்ட் போடுறேன்..

எப்படிடா இருக்க.. புதுப் பையன் எப்படி இருக்கான்

8:24 PM  

Post a Comment

<< Home