காலை தந்தியில்...
சென்னையில் மழை,
ஆயிரம் கோடி ஊழல்,
அபலைப்பெண் கொலை,
சட்டசபை இன்று கூடுகிறது,
கணவனை கொன்றாள் மனைவி,
மாலை மலரில்...
சென்னையில் மழை நீடிக்கும்...
ஆயிரம் கோடியில் அமைச்சருக்கு பங்கு,
சட்டசபையில் அமளி.. எம்.எல்.ஏ சட்டை கிழிப்பு,
கள்ளக்காதலன் சிக்கினான் மனைவி வாக்குமூலம்,
காலையிலிருந்து மாலை வரை,
கேட்கக்கூடாத செய்திகள்...
செய்யக்கூடாத செயல்கள்...
மேற்கத்திய பாதிப்பு,
கைநிறைய சம்பளம்...
காலையில் டிப்பன்
பிட்சா பர்கர்...
தவித்தால் காபி டே, கோலா, பெப்சி..
மதிய உணவு சைனீஸ், இட்டாலியன்,
இரவுக்கு மது... மாது...
சனி ஞாயிறு வீக் எண்ட் ஹாலிடே..
வீட்டை விட்டு வெளியே பெண்களுடன் கும்மாளம்...
பெண்கள் ஆண்களுடன் அரட்டை...
அம்மா,அப்பா பாத்து ரெம்ப நாள் ஆச்சு...
அவங்க கூட உக்காந்து ஒழுங்கா பேசி
மாசக்கணக்காச்சு...
பாட்டி தாத்தா போயே போச்சு...
பெற்றோருக்கோ பையன் ரெம்ப பிசி...
காலைல போனா இரவு வரை வேலை...
பெற்றோர் சொல்வது பிள்ளைக்கு பிடிப்பதில்லை
பிள்ளையின் செய்கை பெற்றோருக்கு பிடிப்பதில்லை
என்னானு கேட்டா...
கலாச்சார வித்யாசமாம்...
கிழ போல்ட்டுகளுக்கு புரியாதாம்...
எல்லோரும் ஒருநாள் கிழவன் கிழவியாவோம்...
புரியாத முட்டாள்கள் வியாக்கியானம் பேசி திரியுதுகள்...
உடலின் தினவு வற்றிப்போனபின் தெரியும்
கலாச்சார முன்னேற்றமா..
இல்லை
கலவிச்சார முன்னேற்றமா என்பது...
மாற்றங்கள் தனிமனித முயற்ச்சி மட்டுமல்ல...
அது ஒரு
சமுதாயத்தின்
ஒட்டு மொத்த முயற்ச்சி..
அடுத்தவரை குற்றம் சொல்வதை நிறுத்தி
ஒவ்வொருவரும்
உள்ளே பார்க்க
ஆரம்பித்தால் வரும்
ஒரு
மறுமலர்ச்சி...!!!
அன்புடன்,
மனசு...