அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Thursday, July 20, 2006

ஆறு மனமே ஆறு!

"பூங்கோதை" அனுசுயா அவர்கள் ஆறு போடுவதற்கு அழைத்து கிட்டதட்ட அரைமாதமாகிவிட்டது. வேலை அதிகமாக இருந்தாலும் எப்படியாவது எழுதிவிடலாம் என்று ஒவ்வொரு நாளும் நினைத்தாலும் இன்றுதான் எழுத முடிந்தது....


நன்றி அனுசுயா...ஆறு-போடுவதற்கு அழைத்தீர்கள்...ஆனா எந்த ஆறைப்பற்றி எழுதுவது என்ற குழப்பம் கொஞ்ச நேரம் இருக்கத்தன் செய்தது... ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த ஆறைப்பற்றி சொன்னார்கள்.... எனக்கென்னவோ எனக்கு பிடித்த நடிக நடிகைகளையும், கனவுகளைகளையும் வெளியே சொல்வதைவிட நாம் கால ஓட்டத்தில் மறந்து போன ஆறை, வாழ்க்கையில் மனிதன் எப்படி இருந்தால் அவன் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவானென்ற ஆறை சொல்லவேண்டும் என்ற எண்ணமே வந்தது...


ஏற்கனவே சொன்னவிசயம்தான்...ஆனால் வலைப்பூவில் எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் இங்கு நான் இந்த ஆறை, எல்லோரும் கடை பிடிக்க வேண்டிய ஆறை இங்கே எழுதுகிறேன்...


மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளாக, கடவுள் சொன்னதாக கவிஞர் சொல்கிறார்... .


ஆறு கட்டளைகள்...

1.முதல் கட்டளை

எவனொருவன் செய்யமுடிந்ததை மட்டும் சொல்கிறானோ, அல்லது தான் சொன்ன சொல்லை காப்பாற்றுகிறானோ அவன் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.அவன் மனம் சந்தோசமாய் அமைதிப்படும்.


2.இரண்டாம் கட்டளை

எவனொருவன் வாழ்க்கை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, இன்பம் துன்பம் என்பவை இயற்கையின்(இறைவனின்) நியதி என்று எடுத்துக் கொள்கிறானோ அவன் மனம் துன்பப்படாது.


இந்த இரண்டு கட்டளைகள் அறிந்தவன் மனம் எப்போதும் எந்த நிலையிலும் அமைதியாய் இருக்கும்.

3.மூன்றாம் கட்டளை

உண்மை பேசுபவனையும், அடுத்தவருக்கு நன்மை செய்வதும் தன் வாழ்க்கையுன் கொள்கையாக கொண்டான் என்றால் உலகம் அவன் அழிந்த பிறகும் அவனை வாழ்த்தும். இந்த உயர்ந்த குணம் அவனை மேலும் மேலும் உயர்த்தும். உண்மை என்பது அன்பாய் இருக்கும் குணமேயன்றி வேறில்லை.


4.நான்காம் கட்டளை

தன் நிலை உயரும் போது தன்னுடன் இருந்தவர்களை மறவாத குணமும். உயர்ந்தபின்பும் அவர்களுடன் இருப்பவன் மனம் தெய்வத்துக்கு இணையானது. கடவுள் மட்டுமே அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி பாவிப்பவர். ஆகையால் இந்த குணம் கடவுளை ஒத்த குணம். பெரிய நிலைக்கு வந்த பிறகு, அகந்தை ஆணவம் ஆகிய குணங்களும் எவனொருவனுக்கு இல்லையோ அவன் பண்பாளன்.


இந்த நான்கு கட்டளைகள் அறிந்தவன் மனம் அமைதிப்படும்.ஆனந்தமாய் வாழ்வான்.

5.ஐந்தாம் கட்டளை

அடுததவர் பொருள் மீது ஆசை கொண்டவன், களவாளன், கோபம் கொண்டவன் இவன் மனித வடிவில் மிருகமேயன்றி வேறில்லை.


6.ஆறாம் கட்டளை

எல்லா உயிர்களிடத்திலும் இடம் பொருள் பாராமல் அன்பு செலுத்துபவனும், தனக்கு உதவி செய்தவருக்கு நன்றி மறாவாமல் இருப்பவனும், கருணை மிக்கவனும் கடவுளின் உருவமேயன்றி வேறில்லை.


இதில் மிருக உணர்வு கொண்ட மனித மனம் கள்ளமனம், தெய்வமனம் கொண்டவன் சிறு குழந்தையின் மனம் போன்றவன்.

இந்த ஆறு கட்டளைகளை உணர்ந்து அதை எவனொருவன் தன் வாழ்க்கையில் பின்பற்றுகிறானோ, அவன் மனமே ஆண்டவன் வாழ்கின்ற வெள்ளைமனம் என்கிறார் கவிஞர். உணர்ந்து தான் சொல்லி இருக்கிறார்.


இந்த பாடலை கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்...


அன்புடன்,
மனசு...

Tuesday, July 11, 2006

கண்ணீர் அஞ்சலி...


சற்று நேரத்திற்கு முன்பு சில மிருக மனிதர்களால் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளில் கடவுள் பாதம் அடைந்த நம் சகோதர சகோதரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி... அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

மிருகத்தனமான இத்தகைய செயலைச் செய்தவர்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார்....


மனசு...