அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Saturday, June 23, 2007

விவசாயி... விவசாயி...


இந்தியா ஒரு விவசாய நாடு அப்படினு ஆரம்பப்பள்ளிக்கூடத்தில படிச்சது இன்னமும் ஞாபகம் இருக்கு. இதோட அர்த்தம் இந்தியாவில விவசாயம்தான் பெரிய தொழில் அப்படினும் சொல்வாங்க. இன்னிக்கு நிலைமை வேறதான் அப்படினாலும், விவசாயம் இல்லைனா ஒரு நாடு சுடுகாடு ஆகிடும். இன்னிக்கு நிலமைல விவசாயிங்க நிலம படுமோசம். ஒன்னு அவங்களால பயனடையறவங்க பெரிய அளவில வியாபாரம் பண்றவங்களோ அல்லது அவங்கள சுரண்டி சாப்பிடுறவங்களாவோ இருக்காங்க அப்படிங்கறதுததான் வேதனை. மொத்தத்தில அவங்களோட உழைப்பப உறிஞ்சுற அட்டைகளாதான் எல்லாருமே இருக்காங்க.

இங்க வாரா வாரம் விவசாயிகள் அவங்க அவங்க தோட்டத்தில விளையிற பொருள்கள கொண்டுவந்து வியாபாரம் பண்ணுவாங்க. நம்ம ஊருல மாதிரி சில்லறை கடைகள்ல கிடைக்கிறத விட இங்க விலை குறைவா இருக்காது. இங்க விலை அதிகம். அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம். அதேமாதிரி நம்ம ஊருமாதிரி பேரம் பேசுறது எல்லாம் கிடையாது. பொருளுக்கான விலை எழுதிருப்பாங்க. எவ்வளவு வேணுமோ வாங்கிக்கலாம். அவ்வளவுதான்.

இதே நம்ம ஊரு மார்க்கெட்டுனா, அவன் ஏண்டா வியாபாரம் பாக்க வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு விலை கேப்பாங்க. அதவிட தெருவில கொண்டுவரவங்ககிட்ட ஒரு விலை கேப்பாங்க பாருங்க அடடா... விலை கேக்குறா அழகே அழகு. அவங்க ஒரு விலை சொல்லி அதுல ஒரு 50 பைசாவாவது குறைச்சு வாங்கலைனா குழம்புல அந்த காய் வேகவே வேகாது.

அப்படி ஒரு நினைப்பு நம்ம மக்களுக்கு. ஆக மொத்தம் நம்ம ஊரு விவசாயி, வேகாத வெயிலில வேர்வை சிந்தி உழைக்கிறதோட மிச்சம் அவனோட வருமை மட்டுமே. அதுக்கு மேல என்ன இருக்கு அவங்ககிட்ட....

இதப்படிக்கிறவங்களாவது இனிமேல் மார்கெட் பக்கம் போனா விவசாயி சொல்றவிலை குடுத்து வாங்க முடியுமானு பாருங்க. தயவுசெய்து பேரம் பேசாதிங்க... நீங்க குடுக்கிறது அவங்க உழைப்புக்கான கூலி அவ்வளவுதான்.
விவசாயினு மட்டுமில்ல நிறைய இடங்கள்ல அப்படிதான். ஒவ்வொருத்தருக்- கும் நாம ஒவ்வொரு தராசு வச்சுருக்கோம். இந்த நிலம மாறனும்.
என்னிக்கு நம்ம விவசாயிகளையும் மதிச்சு அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் குடுக்க போறோமோ அப்போதான் இந்தியா வல்லரசு ஆகும். இல்லைனா இந்தியா ஏச்சுப் பிழைக்கிற வரிசைலதான் இருக்கும். உங்க உழைப்புக்கு உங்க அலுகலகத்தில பேரம் பேசினா என்ன ஆகும்... ???அப்படி நினச்சுப்பாருங்க.... இது என்னோட சின்ன வேண்டுகோள்...


அன்புடன்,

மனசு...