அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Wednesday, November 15, 2006

அய்யா இங்க கொஞ்சம் கவனிங்க...!!!









நேத்து கூகுள் வீடியோஸ்ல இந்தியாவில விவசாயம் செய்யிறத பத்தி ஒரு 25 நிமிட படம் போட்டிருந்தாங்க. அத பாத்தேன்... அம்மாடியோவ், உடம்புல இருந்து உயிர் வரைக்கும் எல்லாம் நடுங்கி போச்சு... இவ்வளவு விசயம் நடந்தும் இன்னும் விவரம் புரியாம இருக்கோமேனு. செயற்கை வேதியல் உரத்தால வர பாதிப்ப பத்திதான் அந்த படம். வாழ்க்கைல மறக்க முடியாத 25 நிமிடங்களப்பா.... எல்லாம் நம்ம மேல்நாடுகள்ல இருந்தும் உள்நாட்டில தயாரிக்கற உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தான். மேலை நாடுகள் எல்லாம் காலிபண்ணினா போதும் சாமினு நம்ம ஊர குப்ப கிடங்கு மாதிரி நினச்சுட்டு இங்க வந்து எல்லாத்தயும் கொட்டுறானுங்க... இங்க இருக்கிறவங்களும் விவரம் புரியாம வாங்கி எல்லாத்தயும் உபயோகிச்சதோட விளைவுகள்தான் அந்த வீடியோல இருக்க விசயம். வெக்கமே இல்லாம மேலை நாடுகள் இந்தமாதிரி பூச்சி கொல்லிகளை நம்ம ஊருல விக்கிறாங்க... இது போதாதுனு நிறைய மாத்திரைகள் கூட இப்படி விற்கறதுதான் வேதனையான விசயம்... இதே விசயத்த ஆவங்கள திங்க சொன்ன பண்ணுவானாங்கறதுதான் கேள்வி....?

சரி நாட்டுக்கு உருப்படியா ஒரு காரியம் செய்யலாமுன்னு, இத ஒரு ரிப்போர்ட்டா தயார் பண்ணி ஆந்த கூகுள் லிங்கயும் சேர்த்து "சுகாதார அமைச்சருக்கும்" , நாட்டின் "முதல் குடிமகனான ஜனாதிபதிக்கும்" தனித்தனியா மின்னஞ்சல் அனுப்பினேன். ஜனாதிபதியோட மின்னஞ்சல் எப்போவும் வேலை செய்யும். அதுல வர விசயத்த கூட இணையத் தளத்திலயும் போடுவாங்க.

ஆனா அமைச்சருக்கு அனுப்பினது போன வேகத்தில திரும்ப வந்திருச்சு. எல்லா அரசு விசயங்களும் இப்படித்தான் போல... அரசு இதை கவனிக்குமா...?
மாநிலமோ மத்தியோ எல்லாம் இப்படித்தானா...?

இத விட இன்னொரு கொடுமைய கொஞ்ச நாளைக்கு முன்னால பார்த்தேன். மதுரை மாநகராட்சியோட இணையத்தளத்துல அவங்களை தொடர்பு கொள்றதுக்கு யாகூ மின்னஞ்சல் முகவரிய குடுத்துருந்தாங்க. மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாநகராட்சினு பீத்திகிடறதோட நிலமையே இப்படியானு நொந்து போயிட்டேன். இதுதான் மின்னஞ்சல் முகவரி mducorp@yahoo.com

முதல் பக்கத்தில எல்லாம் பளபளனுதான் இருக்கு... ஒரு மாநகராட்சிக்காக ஒரு தனியான மின்னஞ்சல் கொடுக்க முடியாதா???? இதுதான் இன்னிக்கு நிலமை. அரசாங்கத்தில தம்பிகளுக்கு கொடுப்பதற்கு பணம் இருக்கு, இதுக்குதான் இல்லை. காலக்கொடுமை.

சரி.... விசயம் என்னனா....மேல இருக்கிற படங்கள்ல ஒன்னு எனக்கு தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிருக்கிங்கனு திரும்பி வந்த மின்னஞ்சல், இன்னொன்று சுகாதாரத்துறையின் இணையத்தளத்தில கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி. இரண்டு படங்களையும் தெளிவா பாருங்க...

மின்னஞ்சல் முகவரி மாறும் பட்சத்தில் அதை மாற்றுவதற்கு கூடவா நேரமில்லை? அல்லது சுகாதார அமைச்சர் அந்த மின்னஞ்சலையே உபயோகப்படுத்துவதில்லையா???

உங்களுக்காக அந்த பக்கத்தை இங்கே தர்றேன்... இத்த நான் எங்க போயி சொல்றது மாமோய்ய்ய்ய்ய்ய்!!! யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.... நேரம் கிடச்சா இந்த கூகுள் வீடியோவயும் பாருங்க...

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282&q=india


அன்புடன்,
மனசு...

Tuesday, November 14, 2006

எங்கே போகிறோம்....?

காலை தந்தியில்...

சென்னையில் மழை,
ஆயிரம் கோடி ஊழல்,
அபலைப்பெண் கொலை,
சட்டசபை இன்று கூடுகிறது,
கணவனை கொன்றாள் மனைவி,

மாலை மலரில்...

சென்னையில் மழை நீடிக்கும்...
ஆயிரம் கோடியில் அமைச்சருக்கு பங்கு,
சட்டசபையில் அமளி.. எம்.எல்.ஏ சட்டை கிழிப்பு,
கள்ளக்காதலன் சிக்கினான் மனைவி வாக்குமூலம்,


காலையிலிருந்து மாலை வரை,
கேட்கக்கூடாத செய்திகள்...
செய்யக்கூடாத செயல்கள்...

மேற்கத்திய பாதிப்பு,
கைநிறைய சம்பளம்...

காலையில் டிப்பன்
பிட்சா பர்கர்...
தவித்தால் காபி டே, கோலா, பெப்சி..
மதிய உணவு சைனீஸ், இட்டாலியன்,
இரவுக்கு மது... மாது...

சனி ஞாயிறு வீக் எண்ட் ஹாலிடே..
வீட்டை விட்டு வெளியே பெண்களுடன் கும்மாளம்...
பெண்கள் ஆண்களுடன் அரட்டை...

அம்மா,அப்பா பாத்து ரெம்ப நாள் ஆச்சு...
அவங்க கூட உக்காந்து ஒழுங்கா பேசி
மாசக்கணக்காச்சு...
பாட்டி தாத்தா போயே போச்சு...

பெற்றோருக்கோ பையன் ரெம்ப பிசி...
காலைல போனா இரவு வரை வேலை...

பெற்றோர் சொல்வது பிள்ளைக்கு பிடிப்பதில்லை
பிள்ளையின் செய்கை பெற்றோருக்கு பிடிப்பதில்லை
என்னானு கேட்டா...
கலாச்சார வித்யாசமாம்...
கிழ போல்ட்டுகளுக்கு புரியாதாம்...

எல்லோரும் ஒருநாள் கிழவன் கிழவியாவோம்...
புரியாத முட்டாள்கள் வியாக்கியானம் பேசி திரியுதுகள்...

உடலின் தினவு வற்றிப்போனபின் தெரியும்
கலாச்சார முன்னேற்றமா..
இல்லை
கலவிச்சார முன்னேற்றமா என்பது...

மாற்றங்கள் தனிமனித முயற்ச்சி மட்டுமல்ல...
அது ஒரு
சமுதாயத்தின்
ஒட்டு மொத்த முயற்ச்சி..
அடுத்தவரை குற்றம் சொல்வதை நிறுத்தி
ஒவ்வொருவரும்
உள்ளே பார்க்க
ஆரம்பித்தால் வரும்
ஒரு
மறுமலர்ச்சி...!!!

அன்புடன்,
மனசு...