அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Sunday, October 15, 2006

பெற்றால்தான் பிள்ளையா....???




சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இது. செய்தி என்னவென்றால், " பிள்ளை இல்லாதவர்கள் சந்தோசமாக இருப்பது எப்படி" என்று ஒரு தம்பதியினர் ஆரம்பித்திருக்கும் ஒரு கிளப்-பற்றியது. படித்ததும் பகீர்னுடுச்சு...

அவங்க ஆரம்பிச்ச நோக்கம் என்னவோ நல்லாத்தான் இருந்தது ஆனா அதுக்கு அவங்க சொன்ன காரணம் எனக்கென்னவோ அவ்வளவு நல்லா தெரியல. அவங்களுக்கு திருமணமாகி 20-30 வருசத்துக்கு மேல ஆகியும் குழந்தை இல்லையாம். குழந்தை இல்லாத வருத்தம் அவங்களை ரெம்ப பாடா படுத்தி... டாக்டர எல்லாம் பாத்து கடைசியில குழந்தை பிறக்கற வாய்ப்பு இல்லைனு தெரிஞ்சதும் ரெண்டு பேரும் ரெம்ப நொந்து போயிருக்காங்க. கடைசில எப்படி சந்தோசமா இருக்கறதுங்கற கண்டுபிடிச்சு அத மத்தவங்களுக்கும் சொல்லனும்னு கிளப் ஆரம்பிச்சு பண்ணிட்டு இருக்காங்களாம்.

இப்ப இயல்பாவே எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரும்... ஏன் அவங்க ஒரு குழந்தைய தத்து எடுத்து வளக்க கூடாதுனு? அதுக்கு அவங்க சொன்ன பதில் என்ன தெரியும...? கணவரோட வீட்டில் இருந்து யாரயாவது தத்து எடுத்தா மனைவிக்கு ஒட்டுதல் இருக்காதாம்... மனைவி வீட்டிலிருந்து தத்து எடுத்தா கணவருக்கு ஒட்டுதலிருக்காதாம்... இரண்டு பேர்வீட்டிலிருதும் இல்லாமல் வேறு யாராவதோ அல்லது ஆஸ்ரமத்திலிருந்தோ தத்து எடுத்தால் இருவருக்குமே ஒட்டுதல் இருக்காதாம்... எனக்கு படித்தவுடன் பகீர்னுடுச்சு... இவ்வளவுக்கு இருவரும் படித்து, சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் இருப்பவர்கள்... இவர்களின் மனம் இவ்வளவு குறுகியாதாக இருப்பதை நினைத்தால் சங்கடமாகவும் இருக்கிறது....


எல்லா குழந்தைகளும் நம் குழந்தை என்று நினைத்த மக்கள்தான் நம் மக்கள்... பக்கத்து வீட்டு பிள்ளையாய் இருந்தாலும் சரி... தெருக்கோடி பிள்ளையாய் இருந்தாலும் அரவணைத்து அன்பு காட்டின காலம் போய்விட்டதா??? அல்லது காலம் மாற மாற மனசு மறத்துப்போய்விட்டதா...?
தான் பெற்றது மட்டும்தான் பிள்ளை என்று நினைத்த நினைவுக்காகத்தான் கடவுள் அவர்களுக்கு பிள்ளை செல்வத்தை கொடுக்க மறுத்துவிட்டாரா?

எவ்வளவோ பிஞ்சுகள் தாய் தந்தை என்பவர்களின் முகம் தெரியாமல் இருக்கிறார்கள்... அவர்களை தத்து எடுத்து வளர்க்கலாமே... இவர்கள் செய்யாமல் போனாலும் கூட அப்படி செய்ய நினைப்பவர்களையும் இவர்கள் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்... இதற்கு ஒரு பத்திரிக்கையில் ஒரு பக்கம் செலவு செய்து செய்தி வேறு போட்டிருக்கிறார்கள்...

நாட்டிற்கு நல்லது செய்யாமல் இருந்தாலும் சரி... உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது... வளர்ந்த இவர்களுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லவேண்டிய பத்திரிக்கையே இங்கே சப்பைகட்டு கட்டியிருக்கிறது...
இது பத்திரிக்கை தர்மமா... இல்லை செய்திக்காக போட்டுவிட்டார்களா தெரியவில்லை...

அம்மா இங்கே வா...வா...
ஆசை முத்தம் தா...தா...

என்று எத்தனையோ குழந்தைகள் தாய் பாசத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் இவர்கள் ஒரு சாபக்கேடு.... இவர்கள் திருந்தினால் முதலில் சந்தோசப்படுபவன் நான்தான்.

அன்புடன்,
மனசு...