வார புத்தகங்கள்...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா... ஒரு வழியா ரெம்ப நாளைக்கு அப்புறமா பதிவு போடலாம்னு நினச்சு உக்காந்து எழுதிட்டு இருக்கேன். தாமதத்துக்கு காரணம் ஊருவிட்டு ஊரு மாறி வேலைவிட்டு வேலைமாறினதுதான்... கிட்டதட்ட ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு அப்புறமா போடுற பதிவு உருப்படியா போடனும்னு நினச்சேன் அதோட விளைவுதான் இதில இருக்குற கருத்துக்கள். இதில யாரையும் புண்பத்துற நோக்கம் எனக்கு இல்லை. நாட்ல நடக்குற அவலங்களை சொல்லனும்னு ஒரு ஆதங்கம் அவ்வளவுதான்.
இன்னிக்கு காலைல வாரா வாரம் அந்த மலர் புத்தகத்தை என் மனைவி உக்காந்து படிச்சுட்டு இருந்தாங்க. இணையத்திலயே வர புத்தகம், வாரா வாரம் படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க... அந்த புத்தகத்தில ஒரு பிரபலமான பெண் எழுத்தாளர் வாசகர் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ற பகுதி... ஆனா எனக்கு என்னவோ எப்பவுமே அதுல உடன் பாடு இல்லை... ஏதோ ஒரு வருக்கு இருக்கும் பிரச்சனைக்கு பதில் சொல்றவங்க அவங்களுக்கே நேரடியா எழுதலாமேனுதான் சொல்லுவேன். என் மனைவியின் வாதம் இதே மாதிரி பிரச்சனை வேற யாருக்கும் இருந்தாலும் அவங்களுக்கு உபயோகப்படும்னு அவங்க வாதம்.
ஆனா வர வர அந்த புத்தகங்களில் வரும் விசயங்கள் ஏதோ வியாபாரத்தனமா படுது. இந்தவாரம் வந்த விசயம் ரெம்ப கண்றாவி. நிஜமாவே இங்க எழுத முடியாத விசயம். எனக்கென்னவோ அவங்களே அந்த மாதிரி கதைகளை திரிச்சு எழுதுறாங்களோனு தோனுது. என்னோட கருத்து என்னனா, நிஜமாகவே கருத்து சொல்ல விரும்புறவங்க சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் எழுதலாமே... குறைந்த பட்சம் இந்த வாரம் வந்த கண்றாவி விசயத்தை தவிர்க்கலாம். இந்த மாதிரி விசயங்கள் சமூகத்தில் எதிர்மறையான விசயங்களைத்தான் உண்டுபண்ணும்.
பத்திரிக்கைகள் சமூக அக்கறையோடு இருக்கனும், சும்மா பத்திரிக்கை விற்கிறேன் பேர்வழினு ஏதோ கதையெழுதி விக்காம இருந்தா சரி...
இது என்னோட கருத்து... உங்க கருத்தையும் பதிவு பண்ணுங்க....
அன்புடன்,
மனசு...